கன்னியாகுமரியில் சூறாவளி: கடலில் குளிக்கத்தடை

Added : மே 14, 2022
Advertisement
நாகர்கோவில்:கன்னியாகுமரியில் நேற்று வீசிய சூறவாளி காரணமாக கடலில் பெரிய அலைகள் எழுந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதனுடன் சூறாவளி வீசிவருகிறது. அணை நீர்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்வதால் நீர் வரத்து அதிகரித்துள்ளது. 48 அடி உயரம் கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 41.60
 கன்னியாகுமரியில் சூறாவளி: கடலில் குளிக்கத்தடை

நாகர்கோவில்:கன்னியாகுமரியில் நேற்று வீசிய சூறவாளி காரணமாக கடலில் பெரிய அலைகள் எழுந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

அதனுடன் சூறாவளி வீசிவருகிறது. அணை நீர்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்வதால் நீர் வரத்து அதிகரித்துள்ளது. 48 அடி உயரம் கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 41.60 அடியாக, 77 அடி உயரம் கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 41.55 அடியாக உள்ளது. சாரல் மழையால் பொடிவிதைப்பு மூலம் விவசாயிகள் கன்னிப்பூ சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று காலை முதல் வெயில் இன்றி இதமான காலநிலை நிலவியது. கடற்பகுதியில் பலத்த காற்று வீசியது. கன்னியாகுமரியில் கடலில் பெரிய அலைகள் எழுந்ததால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். எனினும் விவேகானந்தர்பாறைக்கு படகுகள் வழக்கம் போல் இயக்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X