மூணாறு:கேரளா இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே குமாரமங்கலத்தில் 4 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் திருவனந்தபுரம் கவடியாறு பகுதியைச் சேர்ந்த அருண் ஆனந்த் 37,க்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.3.81 லட்சம் அபராதமும் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
குமாரமங்கலத்தில் கணவனை இழந்த பெண் 7மற்றும் 4 வயதுடைய மகன்களுடன் வாடகை வீட்டில் வசித்தார். அவர்களுடன் பெண்ணின் நண்பரான அருண் ஆனந்த்தும் வசித்தார். 2019 மார்ச் 28ல் வீட்டில் சோபாவில் சிறுநீர் கழித்து விட்டதாக கூறி தாயார் கண் முன் ஏழு வயது சிறுவனை அருண் ஆனந்த் கொடூரமாக தாக்கியதுடன் காலை பிடித்து சுவரில் அடித்தார். அதில் கால் முறிந்த நிலையில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. கட்டிலில் இருந்து கீழே விழுந்து விட்டதாக கூறி நள்ளிரவு 1:30 மணிக்கு தொடுபுழாவில் தனியார் மருத்துவமனையில் சிறுவனை அருணும், தாயாரும் அனுமதித்தனர்.
சந்தேகம் அடைந்த டாக்டர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அன்றைய தொடுபுழா டி.எஸ்.பி. ஜோஸ் தலைமையில் போலீசார் விசாரணையில் சிறுவன் கொடூரமாக தாக்கப்பட்டது தெரிந்தது.2019 மார்ச் 29ல் அருணை கைது செய்து விசாரித்தபோது 7 வயது சிறுவனை தாக்கியதுடன் 4 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. அருண் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் கோலஞ்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஏழு வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி 2019 ஏப்.6ல் இறந்தார். அது தொடர்பாக அருண் மற்றும் தாயார் மீது கொலை வழக்கு பதிவு செய்து 2019 ஏப்.10ல் தாயாரை கைது செய்தனர்.தண்டனை: 4 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு முட்டம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. அருணுக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3.81 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி நிக்ஷன் எம்.ஜோசப் தீர்ப்பளித்தார். ஏழு வயது சிறுவன் கொலை வழக்கில் விசாரணை நடந்து வருவது குறிப்பிடதக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE