மீனவர்கள் விடுதலையில் பா.ஜ.,மலிவு அரசியல்: ம.தி.மு.க., துரை குற்றச்சாட்டு

Added : மே 14, 2022
Advertisement
விருதுநகர்:''தமிழக மீனவர்கள் விடுதலை பிரச்னையில்பா.ஜ.,மலிவு அரசியல்செய்கிறது,'' என ம.தி.மு.க., தலைமை நிலைய செயலாளர் துரை தெரிவித்தார்.விருதுநகரில் அவர் கூறியதாவது:பிரதமர் மோடி அறிவித்த திட்டங்களில் முறைகேடு நடக்கிறது எனக்கூறி பா.ஜ., தமிழகத்தில் ஒவ்வொரு தாலுகாவிலும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை நடத்தவிருப்பது மாநில அரசின்சுயஆட்சி முறையை தவிடுபொடியாக்கும்

விருதுநகர்:''தமிழக மீனவர்கள் விடுதலை பிரச்னையில்பா.ஜ.,மலிவு அரசியல்செய்கிறது,'' என ம.தி.மு.க., தலைமை நிலைய செயலாளர் துரை தெரிவித்தார்.
விருதுநகரில் அவர் கூறியதாவது:பிரதமர் மோடி அறிவித்த திட்டங்களில் முறைகேடு நடக்கிறது எனக்கூறி பா.ஜ., தமிழகத்தில் ஒவ்வொரு தாலுகாவிலும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை நடத்தவிருப்பது மாநில அரசின்சுயஆட்சி முறையை தவிடுபொடியாக்கும் செயல்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டதால் தான் தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர் என கூறுவது அவதுாறு பரப்பும் மலிவான அரசியல். மத்திய அரசு தற்போதைய இலங்கை அரசின் நெருக்கடி நிலையை பயன்படுத்தி 40 ஆண்டுகளாக உள்ள இலங்கை தமிழர் பிரச்னையை தீர்க்க முயற்சிக்க வேண்டும். கச்சத்தீவை மீட்க முடியா விட்டாலும் குறைந்தபட்சம் பாரம்பரிய மீன்பிடி உரிமையையாவது தமிழக மீனவர்களுக்கு பெற்றுத்தர பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X