வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருவனந்தபுரம்-கேரளாவில், இடது ஜனநாயக முன்னணி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான கே.வி.தாமஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
![]()
|
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, திரிக்காகரா தொகுதிக்கு, 31ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதில், உமா என்ற வேட்பாளரை, காங்., களமிறக்கி உள்ளது. ஆளும் இடது ஜனநாயக முன்னணி சார்பில், ஜோ ஜோசப் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஜோசபை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக, சமீபத்தில் கே.வி.தாமஸ் அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும், 'காங்.,கில் இருந்து விலகமாட்டேன்' என்றும் அவர் தெரிவித்தார். இதற்கு, கட்சி தலைமை அவரை எச்சரித்தது.இதையும் மீறி, கே.வி.தாமஸ் நேற்று முன்தினம் ஜோசபை ஆதரித்து பிரசாரம் செய்தார். பொதுக்கூட்ட மேடையில், முதல்வர் பினராயி விஜயனுடன் அவர் அமர்ந்திருந்தார்.
![]()
|
பின் உரையாற்றிய அவர், இடது ஜனநாயக முன்னணி அரசை புகழ்ந்து பேசினார்.இதையடுத்து, கட்சியில் இருந்து கே.வி.தாமசை நீக்கி, காங்., அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. கேரள மாநில காங்., தலைவர் சுதாகரன், இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். இது குறித்து தாமஸ் கூறியதாவது:கட்சியில் இருந்து ஒருவரை நீக்க வேண்டும் என்றால், அதற்கென சில விதிமுறைகள் உள்ளன.
அனைத்து இந்திய காங்., கமிட்டியால் தான், இந்த நட வடிக்கையை எடுக்க முடியும். எனவே, என்னை கட்சியில் இருந்து நீக்குவதாக வெளியாகி உள்ள அறிவிப்பு வெறும் நகைச்சுவை தான்.இவ்வாறு அவர் கூறினார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement