சாப்பாட்டுக்கு சண்டை போட்ட ஆசிரியர்கள்

Added : மே 14, 2022 | கருத்துகள் (7)
Advertisement
லுாதியானா-பஞ்சாபில், மதிய உணவு வாங்க ஆசிரியர்கள் ஒருவருக்கொருவர் முண்டியடித்துச் சென்ற 'வீடியோ' சமூக வலைதளங்களில் பரவி, அதை ஏராளமானோர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். பஞ்சாபில், முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, பள்ளிக் கல்வியை மேம்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம், சமீபத்தில் லுாதியானாவில் நடந்தது. பகவந்த் மான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

லுாதியானா-பஞ்சாபில், மதிய உணவு வாங்க ஆசிரியர்கள் ஒருவருக்கொருவர் முண்டியடித்துச் சென்ற 'வீடியோ' சமூக வலைதளங்களில் பரவி, அதை ஏராளமானோர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.



latest tamil news



பஞ்சாபில், முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, பள்ளிக் கல்வியை மேம்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம், சமீபத்தில் லுாதியானாவில் நடந்தது. பகவந்த் மான் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.இக்கூட்டத்தில் பங்கேற்றோருக்கு, மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. உணவை பெற வரிசையாக செல்லாமல், தலைமை ஆசிரியர்கள் ஒருவரை ஒருவர் முண்டிஅடித்துச் சென்றனர்.


latest tamil news



இதை ஒருவர் 'வீடியோ' எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இந்த வீடியோவை ஏராளமானோர் கடும் விமர்சனத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.'அனைவருக்கும் உதாரணமாக திகழ வேண்டிய ஆசிரியர்களே இப்படி இருந்தால், மாணவர்களுக்கு எப்படி ஒழுக்கத்தை கற்றுக் கொடுப்பர்' என பலர் கேள்வி எழுப்பிஉள்ளனர்.ஆனால், 'பசி வந்தால் பத்தும் பறந்து போகும்' என்பதற்கு உதாரணமாக ஆசிரியர்கள் தங்கள் 'அந்தஸ்தை' மறந்து விட்டனர் என்றும் சிலர் விமர்சித்து உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-மே-202211:38:35 IST Report Abuse
அப்புசாமி பசி வந்திடப் பத்தும் பறந்து போம். அதுவும் ஓசிச் சோறுன்னா இருபதும் பறந்துடும். சொன்னவன் தமிழண்... இந்தில இது மாதிரி இருக்கா? இல்லே பஞ்சாபியிலே இருக்கா?
Rate this:
Cancel
Barakat Ali - Medan,இந்தோனேசியா
14-மே-202208:34:08 IST Report Abuse
Barakat Ali இது கூட பரவாயில்லை ...... நான் படித்த பள்ளியில் ஒரு ஆசிரியையின் அன்பை பெற மூன்று ஆசிரியர்கள் போட்டி போட்டனர் .......
Rate this:
swamy - chennai,இந்தியா
14-மே-202210:28:49 IST Report Abuse
swamyஹா ஹா ஹா ...............
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
14-மே-202208:16:57 IST Report Abuse
Kasimani Baskaran அதான... குறைந்தபட்சம் டாஸ்மாக் தமிழன் போல வரிசை கட்டி சாப்பாடு வாங்கியிருந்தால் பாராட்டியிருப்பார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X