வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சியோல்-வட கொரியாவில், கொரோனா பரவி வருவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
![]()
|
உலகம் முழுதும், 2020ல் கொரோனா பரவத் துவங்கியபோது, கிழக்காசிய நாடான வட கொரியாவில் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன் காரணமாக, தங்கள் நாட்டில், ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என, வட கொரியா தெரிவித்தது.இந்நிலையில், வட கொரியாவில், கொரோனா வேகமாக பரவி வருவதாக, நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. பலர், 'ஒமைக்ரான்' வகை வைரசால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
![]()
|
இதையடுத்து, வைரஸ் பரவலை தடுக்க, நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.இந்நிலையில், அங்கு கொரோனாவால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து, வட கொரிய செய்தி நிறுவனம்நேற்று வெளியிட்ட அறிக்கை: நேற்று முன்தினம் ஒரே நாளில், 18 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு, காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டு, ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இதில், ஒருவர் ஒமைக்ரான் வகை கொரோனாவால் உயிரிழந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.எனினும், மீதமுள்ளஐந்து பேருக்கு, கொரோனா பாதிப்பு இருந்ததா என்பது, இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement