இது உங்கள் இடம்: ஹிந்து மதத்திற்கு எதிரானவர் அல்ல!

Updated : மே 14, 2022 | Added : மே 14, 2022 | கருத்துகள் (145) | |
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு அனுப்பிய கடிதம்:தி.ஸ்ரீராம் பாலாஜி, கொழையூர், மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: முதல்வர் ஸ்டாலின், ஏதோ ஹிந்து மதத்திற்கு எதிரானவர் போலவும், மற்ற மதங்களை மட்டுமே ஆதரிப்பவர் போலவும், சிலர் புலம்பி வருகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு, நான் சொல்வதாவது:ஸ்டாலின் பிறப்பால் ஒரு ஹிந்து.
Hindu, DMK, MK Stalin, Stalin

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு அனுப்பிய கடிதம்:


தி.ஸ்ரீராம் பாலாஜி, கொழையூர், மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: முதல்வர் ஸ்டாலின், ஏதோ ஹிந்து மதத்திற்கு எதிரானவர் போலவும், மற்ற மதங்களை மட்டுமே ஆதரிப்பவர் போலவும், சிலர் புலம்பி வருகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு, நான் சொல்வதாவது:

ஸ்டாலின் பிறப்பால் ஒரு ஹிந்து. அவரின் கல்விச் சான்று முதல் அனைத்திலும், ஹிந்து என்று தான் இருக்குமே தவிர, வேறு மதத்தின் பெயர் குறிப்பிடப்பட்டு இருக்காது. ஹிந்து மதத்திற்கு எதிரானவர் என்றால், அவரின் மனைவி மற்றும் குடும்பத்தினர் கோவிலுக்கு செல்வதை தடுத்திருக்க மாட்டாரா?

ஸ்டாலினும், தன் கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் யாரும் சாமி கும்பிடக்கூடாது என தடை போடவில்லையே. தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அமைச்சர்கள் நெற்றி நிறைய விபூதி, குங்குமம் வைத்துள்ளனரே... அதை தடுத்தாரா? அவரது அமைச்சரவையில், ஹிந்து அறநிலையத் துறை தானே சிறப்பாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்படுகிறது. ஓராண்டில் எத்தனையோ கோவில்கள் புனரமைக்கப்பட்டு இருப்பதுடன், கும்பாபிஷேகமும் நடந்துள்ளதே. இதெல்லாம் ஸ்டாலின் ஆலோசனைப்படிதானே நடக்கிறது.


latest tamil news


அவர் முதல்வரானவுடன், திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து பட்டர்கள் வந்து மரியாதை செய்தனரே, அதை அவர் மறுக்காமல் ஏற்றுக் கொண்டாரே... முதல்வரின் மகன் உதயநிதி, தருமபுரம் ஆதீனத்தை சந்தித்து வாழ்த்து பெற்று வந்தாரே; முதல்வர் நினைத்தால், அதை தடுத்திருக்கலாமே... செய்யவில்லையே!

ரம்ஜானுக்கும், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கும் முதல்வர் வாழ்த்து கூறுகிறார்; ஹிந்து பண்டிகைகளுக்கு கூறுவதில்லை என்று குறை கூறுபவர்கள், அவர் திடீரென தீபாவளிக்கு வாழ்த்து கூறினால், ஓட்டுக்காக தன் கொள்கையிலிருந்து மாறி விட்டார்; தடம் புரண்டு விட்டார் என்று மாற்றியும் பேசுவர்.

மொத்தத்தில், ஸ்டாலின் எந்த ஒரு சூழ்நிலையிலும், ஹிந்து மதத்திற்கு எதிராக இருந்ததில்லை. அவரை ஹிந்து மதத்திற்கு எதிரானவர் என்று கூறி, நம்மிடம் இருந்து பிரித்து விடாதீர்கள்.

Advertisement




வாசகர் கருத்து (145)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
15-மே-202207:07:30 IST Report Abuse
Darmavan கேவலமான பதிவு. வந்தேறி மதத்தினர் முன் ஹிந்துக்களைஇழிவு படுத்தியவன் .பல கோயில்களை இடித்தவன் ஹிந்துக்களுக்கு நல்லவனா
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ
14-மே-202221:07:42 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN     ////
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
14-மே-202220:56:09 IST Report Abuse
Dhurvesh தமிழர்களை மட்டம் தட்டும் போது வராத கோபம் வட இந்தியர்களை ஏதாவது சொன்னால் இவருக்கு என்ன கோபம் வருது. இதுதான் இவர்களுடைய டிசைன். அப்போ பிரதமர் பானி பூரி, சமோசா போடுவதும் தொழிலில்தான் சேர்த்தி என்று சொன்னப்போ எங்க போயிருந்தாங்க இவங்க. யார் யார் எந்தெந்த பாஷை படிக்கணுங்கறது அவரவர் விருப்பம். தேவைக்கேற்ப இந்தி மட்டுமல்ல, இத்தாலியன், ஜெர்மன், சைனீஸ், ரஸ்ஸியன் இப்படி எந்த மொழி வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். பிரச்னை என்னவென்றால் கட்டாயமாக திணிக்கப்படுவதுதான். தனியார் சிபிஎஸ்ஈ, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மத்திய அரசு பள்ளிகள் மற்றும் தென்னிந்திய இந்தி பிரச்சார சபை இவற்றில் இந்தி கற்பிக்கப் படுவது தொடர்ந்து பல ஆண்டுகளாக நடைமுறையில் இருப்பதுதான். இப்போது கூட இந்தி படித்த தமிழர்களுக்கு மத்திய அரசுப் பணிகள் கிடைப்பது உறுதி செய்யப் பட்டால் நிச்சயம் தமிழர்கள் இந்தி கற்றுக்கொள்வார்கள். இதுதான் மந்திரி பொன்முடி அவர்கள் பேச்சின் சாராம்சம்.
Rate this:
Soumya - Trichy,இந்தியா
15-மே-202200:08:29 IST Report Abuse
Soumyaஏன் அடிமையே விடியல் அம்பூட்டு அப்பாட்டாகாரா ஹீஹீஹீ...
Rate this:
Darmavan - Chennai,இந்தியா
15-மே-202207:13:28 IST Report Abuse
Darmavanதேசவிரோதிகளுக்கு பிரிவினைவாதிகளுக்கு சப்பை கட்டு.கேவலம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X