அ.தி.மு.க., பக்கம் சாய்கிறதா ம.தி.மு.க.,?

Updated : மே 14, 2022 | Added : மே 14, 2022 | கருத்துகள் (7)
Advertisement
துாத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள வீரசக்கதேவி கோவிலின், 66வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு அறக்கட்டளை இளைஞர் அணி, மாமன்னர் திருமலை நாயக்கர் இளைஞர் பேரவை சார்பில் தொடர் ஜோதி ஓட்டம் நடத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியை, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி எம்.எல்.ஏ.,வுமான ராஜு துவக்கி வைத்தார். ம.தி.மு.க., பொதுச்செயலர்
ADMK, MDMK, Durai Vaiko

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

துாத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள வீரசக்கதேவி கோவிலின், 66வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு அறக்கட்டளை இளைஞர் அணி, மாமன்னர் திருமலை நாயக்கர் இளைஞர் பேரவை சார்பில் தொடர் ஜோதி ஓட்டம் நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியை, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி எம்.எல்.ஏ.,வுமான ராஜு துவக்கி வைத்தார். ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவின் மகனும், அக்கட்சியின் தலைமை நிலைய செயலருமான துரை, ஜோதியை பெற்றுக் கொண்டார். தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க., அங்கம் வகிக்கிறது. தி.மு.க.,வில் நாயுடு சமுதாயத்தை சேர்ந்த அமைச்சர்கள் மூன்று பேர் மற்றும் சில எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.


latest tamil news


அமைச்சர் அல்லது எம்.எல்.ஏ., ஒருவரைக் கூட அழைக்காமல், அ.தி.மு.க., 'மாஜி'யை அழைத்து விழாவை நடத்தியது, தி.மு.க.,வில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.சட்டசபை தேர்தலில், ராஜு கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்டதால், அவர் வெற்றி பெறுவதற்காக, அத்தொகுதியில் ம.தி.மு.க., போட்டியிடாமல், சாத்துார் தொகுதியில் போட்டியிட்டது.

ஊரக உள்ளாட்சி தேர்தலில், அந்த தொகுதியில், அ.தி.மு.க.,வுடன் ம.தி.மு.க., மறைமுக கூட்டணி வைத்ததாகவும் சர்ச்சை எழுந்தது. தற்போது, தொடர் ஜோதி ஓட்டம் விவகாரம் வாயிலாக, அ.தி.மு.க., பக்கம் ம.தி.மு.க., சாய்கிறதா என்ற சர்ச்சையும் கிளம்பி உள்ளது.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
14-மே-202212:03:04 IST Report Abuse
Thiagarajan Kodandaraman நல்லது நடந்தால் சந்தோசம் ...கூட்டணி பலமாய் இருந்தால் அடுத்து வரும் நாட்கள் மகிழ்ச்சியாய் இருக்க வாய்ப்பு உள்ளது
Rate this:
Cancel
14-மே-202211:22:08 IST Report Abuse
ஆரூர் ரங் அதிமுகவை அழிக்க சரியான வழி வைகோவை அதனுடன் சேர வைப்பது.🙃 செல்லுமிடமெல்லாம் செல்லரித்துப் போகிறது. போன இடமெல்லாம் பட்டுப்போகிறது . காணும் இடமெல்லாம் கெட்டுப்போகிறது. ராசியான மனிதர்
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
14-மே-202209:16:08 IST Report Abuse
a natanasabapathy கட்சி வேறு ஜாதி வேறு என்று நினைத்து இருக்கலாம் . ம தி மு க vaal எந்த பிரயோசனமும் இல்லை .சேர்ப்பது வேஸ்ட்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X