பூட்டியே கிடக்கிறது சுகாதார வளாகம்; சுகாதாரமற்ற நிலையில் குடிநீர் சப்ளை

Added : மே 14, 2022
Advertisement
திண்டுக்கல் : பூட்டியே கிடக்கிறது சுகாதார வளாகம்,சுகாதாரமற்ற நிலையில் குடிநீர் சப்ளை,தெருவிளக்குகள் இன்றி இருள் என,திண்டுக்கல் மாநகராட்சி 11 வது வார்டு மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். லைன் தெரு, காமராசபுரம், லாரி பேட்டை, மவுன்ஸ்புரம் 1-5 தெரு, கோட்டை குளம் ரோடு, கொத்தனார் தெரு உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் வினியோகிக்கும் குடிநீர்

திண்டுக்கல் : பூட்டியே கிடக்கிறது சுகாதார வளாகம்,சுகாதாரமற்ற நிலையில் குடிநீர் சப்ளை,தெருவிளக்குகள் இன்றி இருள் என,திண்டுக்கல் மாநகராட்சி 11 வது வார்டு மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர்.

லைன் தெரு, காமராசபுரம், லாரி பேட்டை, மவுன்ஸ்புரம் 1-5 தெரு, கோட்டை குளம் ரோடு, கொத்தனார் தெரு உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் வினியோகிக்கும் குடிநீர் சுகாதாரமற்றதாக உள்ளது. ரோடும் குண்டும் குழியுமாக உள்ளது. தெருவிளக்குகள் போதிய அளவிற்கு இல்லாததால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. குப்பை தொட்டி வசதியில்லாததால் குப்பையை ரோட்டோரம் கொட்டுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. லைன் 2வ து தெருவில் உள்ள ஆண்கள், பெண்களுக்கான கழிப்பறை, குளியலறை கட்டப்பட்டு செயல்பட்ட போது போதிய வசதிகள் இல்லாமல் இருந்தது.

குளிப்பதற்கு மக்கள்தான் வாளி கொண்டு செல்ல வேண்டும். கழிப்பறையிலும் பக்கெட் இல்லாத நிலை இருந்தது. இங்குள்ள கழிவு நீர் செல்ல வசதியின்றி அங்கன்வாடி, குடியிருப்புப் பகுதியை சூழும் நிலை இருந்தது. தற்போது சுகாதார வளாகம் யாருக்கும் பயனின்றி பூட்டப்பட்டு கிடக்கிறது. புகார் கொடுத்தும் யாரும் கண்டு கொள்ள வில்லை. இதோடு இங்குள்ள குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையம் சுற்றிலும் குப்பை , கழிவு நீருமாக சுகாதாரமற்று உள்ளது. குழந்தைகளுக்கு நோய் தொற்று அபாயம் உள்ளதால் குழந்தைகளை அனுப்புவதை பெற்றோர் விரும்புவதில்லை என்கின்றனர் இப்பகுதியினர்.

வெள்ளைச்சாமி, லைன் 2வது தெரு: சுகாதாரவளாகம் பயன்படுத்த முடியாதவாறு வெகுநாட்களாக பூட்டப்பட்டுள்ளது. இங்குள்ள பெரும்பாலான வீடுகளில் கழிப்பறை வசதி இல்லை.இதனால் இதையே மக்கள் பயன்படுத்தி வந்தனர். இதுவும் பூட்டிகிடப்பதால் திறந்த வெளியை பயன்படுத்தும் அவல நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்,என்றார். வேளாங்கன்னி, சின்ன அய்யங்குளம்: லயன் தெரு கழிப்பறை, குளியலறையை நாங்களும் பயன்படுத்தி வந்தோம். பல ஆண்டுகளாக செப்டிக் டேங்க் கழிவு அகற்றப்படாததால் கழிவு நிறைந்து தெருவிற்குள் வர பெரும் சுகாதாரக்கேட்டால் தவித்தோம் . அதன்பின் சுகாதாரவளாகத்திற்கு பூட்டு போட்டனர். தற்போது 3 மாதங்களாகியும் செப்டிக்டேங்க் கிளின் ஆகவில்லை.சுகாதாரவளாகத்தையும் திறக்கவில்லை.

சாக்கடையால் சுகாதாரக்கேடு
ஏ.பாக்கியலட்சுமி, காமராசபுரம்: இப்பகுதியில் திறந்தவெளியில் உள்ள மிகப்பெரிய சாக்கடையால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரப்புகின்றன. சாக்கடையை மூடி, குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும். கலங்களாக வரும் குடிநீரை குடிப்பதால் உடல்நல கோளாறு ஏற்படுகிறது. போதிய தெருவிளக்குகள் இல்லாததால் மாலை 6:00 மணிக்கு மேல் வெளியே வர முடியாமல் வீடுகளுக்குள் முடங்கும் நிலை உள்ளது. குண்டும் குழியுமாக உள்ள ரோடால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

மாரியம்மாள், கவுன்சிலர் (மார்க்சிஸ்ட்): சுகாதார வளாகத்தினை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கழிவு நீர் குடியிருப்புக்குள் செல்லாத வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதன் பணி துவங்கும்,என்றார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X