காவிரி குழாய் உடைப்பு சரிபார்ப்பு; இனி 2 நாட்களுக்கு குடிநீர் கட்

Added : மே 14, 2022
Advertisement
வேடசந்துார் : காவிரி குடிநீர் குழாயில் ஆறு இடங்களில் உடைப்பை ஏற்பட்டதை தொடர்ந்து அதை சரி பார்க்கும் பணி நடைபெறுவதால், இரு நாட்களுக்கு காவிரி குடிநீர் சப்ளை இருக்காது.கரூர் காவிரி ஆற்றில் உள்ள கட்டளை பகுதியில் இருந்து கரூர் ஜெகதாபி, பாளையம், குஜிலியம்பாறை, கோவிலூர் வழியாக வேடசந்துார் , ஒட்டன்சத்திரம் நகர் பகுதிகளுக்கு காவிரி குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.

வேடசந்துார் : காவிரி குடிநீர் குழாயில் ஆறு இடங்களில் உடைப்பை ஏற்பட்டதை தொடர்ந்து அதை சரி பார்க்கும் பணி நடைபெறுவதால், இரு நாட்களுக்கு காவிரி குடிநீர் சப்ளை இருக்காது.



கரூர் காவிரி ஆற்றில் உள்ள கட்டளை பகுதியில் இருந்து கரூர் ஜெகதாபி, பாளையம், குஜிலியம்பாறை, கோவிலூர் வழியாக வேடசந்துார் , ஒட்டன்சத்திரம் நகர் பகுதிகளுக்கு காவிரி குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இக்குழாய் பாதையில் வேடசந்துார் மார்க்கெட் ரோடு, புளியம்பட்டி, குஜிலியம்பாறை சின்ன குளம், பாளையம் கே.ஆர்.கே., பாறை, கடைவீதி, ஜெகதாபி உள்ளிட்ட 6 இடங்களில் நீர் கசிவு ஏற்பட்டு தண்ணீர் வீணாகியது. குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்புகளை சரி செய்யும் நோக்கில் , நேற்று காலை காவிரி குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது.

ஜே.சி.பி., இயந்திரங்கள் கொண்டு மண்ணைப் பறித்து, குழாயின் உடைந்த பகுதிகளை சரி செய்யும் பணிகள் துவங்கின. இதனால் நேற்று (மே 13) முதல் சப்ளை வழங்கப்படவில்லை நாளை (மே 15) மதியத்திற்கு மேல் தான் குடிநீர் வினியோகம் தொடங்கும்.காவிரி குடிநீர் திட்ட உதவி பொறியாளர் பார்த்தசாரதி: காவிரி குடிநீர் திட்ட குழாயில் அனைத்து கசிவுகளும் சரி பார்க்கப்பட்டு வருகிறது. நாளை (மே 15) முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் தொடங்கிவிடும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X