மகிழ்ச்சியும், சற்று அதிர்ச்சியும் தந்த வேதியியல்!

Added : மே 14, 2022
Advertisement
திண்டுக்கல் : 'பிளஸ் 2 வேதியியல் தேர்வு வினாக்கள் எளிதாக இருந்தபோதிலும் 15 மதிப்பெண்களுக்கான வினாக்கள் சற்று கடினமாக அமைந்ததால் மகிழ்ச்சியுடன் சற்று அதிர்ச்சி கலந்திருந்ததாக இருந்தது' என எழுதிய மாணவர்கள் தெரிவித்தனர்.அவர்கள் கூறியதாவது:பதிலளிப்பது சுலபமாக இருந்தது என்.காவியவதனா, மாணவி, கே. சி.எம்., மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, நிலக்கோட்டை: ஆசிரியர்கள்
 மகிழ்ச்சியும், சற்று அதிர்ச்சியும் தந்த வேதியியல்!

திண்டுக்கல் : 'பிளஸ் 2 வேதியியல் தேர்வு வினாக்கள் எளிதாக இருந்தபோதிலும் 15 மதிப்பெண்களுக்கான வினாக்கள் சற்று கடினமாக அமைந்ததால் மகிழ்ச்சியுடன் சற்று அதிர்ச்சி கலந்திருந்ததாக இருந்தது' என எழுதிய மாணவர்கள் தெரிவித்தனர்.அவர்கள் கூறியதாவது:


பதிலளிப்பது சுலபமாக இருந்தது


என்.காவியவதனா, மாணவி, கே. சி.எம்., மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, நிலக்கோட்டை: ஆசிரியர்கள் வகுத்துக் கொடுத்த திட்டத்தின்படி படித்தோம். எதிர்பார்க்கின்ற மார்க் கிடைக்கும். 20 சதவீத கேள்விகள் புத்தகத்தை தாண்டி கேட்கப்பட்டிருந்தது. 2 மதிப்பெண் வினாக்களை புரிந்து எழுதும்படி கேட்டிருந்தனர். எல்லா பகுதிகளிலும் சமபங்கு கேள்வி கேட்டிருந்தனர். அனைத்து வினாக்களும் நேரடியாகவே கேட்கப்பட்டிருந்தது. குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி கேள்விகள் இருந்தன. பள்ளி, அரசு நடத்திய திருப்புதல் தேர்வுகளில் இருந்தும் கேள்விகள் இருந்தன. எதிர்பார்த்து சென்ற கேள்விகளாக இருந்ததால் பதிலளிப்பது வெகு சுலபமாக இருந்தது.


எதிர்பாராத வகையில் கேள்விகள்


சிவகாமி, ஆசிரியை,பி.ஆர்.ஜி வேலப்ப நாயுடு மெட்ரிக்.,பள்ளி, நெய்க்காரப்பட்டி: ஒரு மார்க் ஐந்து மார்க் கேள்விகள் எளிதாக இருந்தது. மாணவர்கள் எளிதில் பாஸ் செய்து விடலாம். புத்தகத்தில் உள்ள எளிதான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. கட்டாய பதிலளிக்கும் வினாக்கள் ஆன 2 மதிப்பெண் கேள்விகள் எதிர்பாராத வகையில் இருந்தது.இதனால் முழு மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் எண்ணிக்கை குறையலாம். பொதுவாக வினாத்தாள் எளிதாகவே இருந்தது.


அனைவரும் தேர்ச்சி பெறலாம்


டி.கலையரசி, சக்திசாய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அய்யலூர் தங்ம்மாபட்டி: நேற்று நடந்த வேதியியல் தேர்வில் ஒரு மதிப்பெண் வினா எளிமையாக இருந்தது. கட்டாயம் பதில் அளிக்க வேண்டும் என்ற பகுதியில் இருந்த இரண்டு, மூன்று மதிப்பெண் வினாக்கள் சிறிது கடினமாக இருந்தன. ஒரு 5 மதிப்பெண் வினா மட்டும் எதிர்பார்க்காத பகுதியில் இருந்து கேட்கப்பட்டிருந்தது. நன்கு படித்தவர்கள் தேர்வு தாளுக்குரிய 70ல் 60 மதிப்பெண் பெறுவது கடினமான ஒன்றல்ல. அனைவரும் தேர்ச்சி பெறலாம்.


தேர்வு மிக எளிமை


பி.சக்தி நந்தன், எஸ்.எம்.பி.எம்., மெட்ரிக் பள்ளி, திண்டுக்கல் : வேதியியல் பாடத்தில் அனைத்து பிரிவுகளிலும் இருந்தும் கேள்விகள் எளிமையாக இருந்தன. கேள்விகளும் பாடப்புத்தகத்தில் இருந்து தான் இடம் பெற்றிருந்தன. படிப்பில் சராசரி பின் தங்கிய மாணவர்கள் கூட தேர்ச்சி பெற முடியும். எதிர்பார்க்கப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. நன்கு படித்தவர்கள் அதிக மதிப்பெண் பெறலாம்.


கொஞ்சம் கடினம்தான்


டி.சபரி அரசி, ஆசிரியை, அகரம் அரசு மேல்நிலைப்பள்ளி திண்டுக்கல்: அனைத்து பாடங்களில் இருந்தும் வினாக்கள் இடம் பெற்றிருந்தன. ஒரு மதிப்பெண் வினாக்கள் 80 சதவீதம் பாடப்புத்தகத்தின் பின் பகுதியில் இருந்தும், 20 சதவீதம் பாடத்திற்கு உள்ளே இருந்தும் இடம் பெற்றிருந்தது. ஐந்து மதிப்பெண் வினாக்கள் மிகவும் எளிமையாக இருந்தது. இரண்டு மதிப்பெண் வினாக்கள் கொஞ்சம் கடினம் தான். திருப்புதல் தேர்வில் இடம் பெற்றிருந்த கேள்விகள் 30 சதவீதம் இடம் பெற்றிருந்து. அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறலாம். நன்றாக படிக்கும் மாணவர்கள் நுாறு மதிப்பெண் பெறுவது சிரமம்.


தேர்ச்சி பெறுவது எளிது


எஸ்.என்.தினகரன், விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, காளாஞ்சிபட்டி:அனைவரும் தேர்ச்சி அடையும் வகையில் தேர்வுத்தாள் வடிவமைக்கப்பட்டிருந்தது. 15 ஒரு மார்க் வினாக்களில் 13 புத்தகத்தின் பின்னாலும் (புக் பேக்), இரண்டு புத்தகத்திற்கு உள்ளேயும் கேட்கப்பட்டிருந்தது. 2 மதிப்பெண் வினாக்களில் கட்டாயமாக விடை அளிக்கக்கூடிய வினா சற்று கடினமாக இருந்தது. மூன்று , ஐந்து மதிப்பெண் வினாக்கள் எளிதாக இருந்தது. ஆசிரியர்கள் தெளிவாக நடத்தியதால் சுலபமாக எழுதி உள்ளேன். பாடங்களை நன்றாக புரிந்து படித்தவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X