பழநி : காவலப்பட்டி அருகே சித்தரேவு உச்சி காளியம்மன் கோயில் தெடர்பாக ஒரு தரப்பினர் ஆர்.டி.ஓ அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
காவலப்பட்டி அருகே சித்தரேவு பகுதியில் ஒரு தரப்பினர் உச்சி காளியம்மன் கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தினர். இரு தரப்பினர் இடையே பிரச்னை உள்ளது. இதற்காக 2 சென்ட் நிலம் வாங்கியது தொடர்பான பட்டா, வரி, மின் கட்டண ரசீது உள்ளிட்ட ஆவணங்களுடன் ஒரு பிரிவினர் ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு வந்தனர். நிலத்தை முறையாக அளவீடு செய்து தருமாறு முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
ஆர்.டி.ஓ.,சிவக்குமார் பேச்சுவார்த்தையில் திங்கள் கிழமை அன்று அளவீடு செய்வதாக தெரிவித்தார்.இதில் கொங்கு மக்கள் முன்னணி மாவட்டச் செயலாளர் ஈஸ்வரன், மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபு, விவசாய அணி செயலாளர் கிருஷ்ணகுமார், மாவட்ட அமைப்பாளர் கண்ணன், நகர செயலாளர் தனபால் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE