வேடசந்துார் : திண்டுக்கல் மாவட்டம் குரும்பபட்டி மாளம்மன் கோயில் விழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இக்கோயிலில் சித்திரை உற்ஸவ விழாவில் வாணவேடிக்கையுடன் துவங்கும் சுவாமி சக்தி அழைத்தலை தொடர்ந்து, பக்தர்கள் அம்மனிடம் வைக்கும் வேண்டுதல் நிறைவேறியதும் தங்களது தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதற்காக கோயில் பூஜாரி சரவணகுமார் வரிசையாக அமர்ந்திருந்த பக்தர்கள் தலையில் தேங்காயை உடைத்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE