மாணவர்கள் ஊர்வலம்
பழநி : நெய்க்காரப்பட்டி ராமச்சந்திரா இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி சார்பில் புகையிலை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பழநி பஸ் ஸ்டாண்ட் அருகே துவங்கி தாராபுரம் ரோடு, திருவள்ளுவர் சாலை, திண்டுக்கல் சாலையில் வழியாக நடந்தது. பள்ளி முதல்வர் சுப்பிரமணி, விளையாட்டுத் துறை இயக்குனர் வினோத் ராஜ் கலந்து கொண்டனர்.
கல்லுாரிகளுக்கான போட்டி
திண்டுக்கல்: ஜி.டி.என். கல்லுாரியின் சார்பில் கல்லுாரிகளுக்கிடையே இன்டர் காலேஜியேட் சிம்போசியம்' போட்டி நடந்தது. மதுரை, திண்டுக்கலை சேர்ந்த பல கல்லுாரிகள் கலந்து கொண்டன.தொழில்நுட்பம், தொழில்நுட்பம் அல்லாத 12 போட்டிகள் நடந்தன. கணினி துறை பேராசிரியர் சாந்தமோனா வரவேற்றார். கல்லுாரி முதல்வர் பாலகுருசாமி, தாளாளர் ரெத்தினம், இயக்குநர் துரை ரெத்தினம், கல்வி இயக்குநர் மார்க்கண்டேயன், சுய உதவிப் பிரிவின் துணை முதல்வர் நடராஜன் பேசினர். கணினிதுறை பேராசிரியர் அழகாம்பிகை நன்றி கூறினார்.
பல்கலையில் சொற்பொழிவு
சின்னாளபட்டி: காந்திகிராம பல்கலை தமிழ்த்துறை சார்பில் 'செய்தி சேகரிப்பு, செய்தி வாசிப்பு சார்ந்த நுட்பங்கள்' குறித்த சிறப்பு சொற்பொழிவு நடந்தது. தமிழ் துறை தலைவர் முத்தையா வரவேற்றார். மதுரை வானொலி நிலைய முன்னாள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சவித்ரா ராஜாராம் பேசுகையில், 'ஒரு செய்தி சேகரிப்பாளர் நடுநிலைத்தன்மை உடையவராகவும், உண்மை நிலையை மக்களுக்கு வெளிப்படுத்துவதாகவும் தனித்தன்மையுடன் இருக்கவேண்டும். ஊடகத்துறையில் இளைஞர்களுக்கு நிறைய வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. மொழி சார்ந்த திறன்களை வளர்த்துக் கொண்டால் நிச்சயம் வாழ்வில் வெற்றி பெறலாம்,'' என்றார்.கவுரவ விரிவுரையாளர் சங்கரநாராயணன் நன்றி கூறினார்.
கல்லுாரியில் ரத்ததான முகாம்
திண்டுக்கல்: திண்டுக்கல் பார்வதீஸ் கல்லுாரியில் பன்னாட்டு ரோட்டராக்ட், நரசிங்கபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து ரத்ததான முகாம் நடத்தியது. நிர்வாக இயக்குனர் ஸ்ரீதரன், செயலாளர் பிரவீன், முதல்வர் சுகுமார், துணை முதல்வர் சீனிவாசன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக டாக்டர் சீனிவாசன், திண்டுக்கல் மருத்துவ அலுவலர் சுகந்தி, ரத்த வங்கி மருத்துவ அலுவலர் முகமது கமாலுதீன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாண்டி பங்கேற்றனர். கல்லுாரி ரோட்டராக்ட் சங்க ஒருங்கிணைப்பாளர் இவாஞ்சலின் இந்திரா மேற்பார்வையில் மாணவர்கள் ரத்ததானம் செய்தனர்.
தெரசா பல்கலையில் திறன் பயிற்சி
கொடைக்கானல்: தெரசா பல்கலையில் உதவி பேராசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது. அனைத்து அரசு, அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லுாரி உதவி பேராசிரியர்கள் பங்கேற்றனர். முதன்மை பல்கலை பேராசிரியர்கள்,தொழில் நிபுணர்கள் பயிற்சி அளித்தனர். பயிற்சி பெற்ற உதவி பேராசிரியர்களுக்கு அரசின் சான்றிதழ் வழங்கப்பட்டது. பல்கலை துணைவேந்தர் வைதேகி கலந்து கொண்டார்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement