குடிபோதையில் கார் ஓட்டி தொடர் விபத்து: ரவுடிக்கு தர்ம அடி

Added : மே 14, 2022
Advertisement
புதுச்சேரி-பிரபல ரவுடி குடிபோதையில் காரை ஓட்டி அடுத்தடுத்து ஏற்படுத்திய விபத்தில் 25 பைக்குகள், 4 கார்கள் சேதமடைந்தன; 5 பேர் படுகாயத்துடன் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினர். பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து ரவுடியை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.புதுச்சேரி பாண்டி மெரினா பகுதியில் நேற்றிரவு 7:00 மணியளவில், வோல்ஸ்வோகன் கார் ஒன்று(பி.ஒய்.01.சி.எல். 8884) அதிவேகமாக சீறி பாய்ந்தது. குடிபோதையில்

புதுச்சேரி-பிரபல ரவுடி குடிபோதையில் காரை ஓட்டி அடுத்தடுத்து ஏற்படுத்திய விபத்தில் 25 பைக்குகள், 4 கார்கள் சேதமடைந்தன; 5 பேர் படுகாயத்துடன் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினர். பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து ரவுடியை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.புதுச்சேரி பாண்டி மெரினா பகுதியில் நேற்றிரவு 7:00 மணியளவில், வோல்ஸ்வோகன் கார் ஒன்று(பி.ஒய்.01.சி.எல். 8884) அதிவேகமாக சீறி பாய்ந்தது. குடிபோதையில் இருந்த கார் டிரைவர் சகட்டுமேனிக்கு காரை ஓட்டி சென்றார். பைக்கில் சென்றவர்களை இடித்து தள்ளிய அந்த கார், திடீரென சோனாம்பாளையம் உப்பளம் வாட்டர் டேங்க் வழியாக சுப்பையா சாலையில் பறந்தது. தொடர்ந்து, சுப்பையா சாலையில் தாறுமாறாக ஓடிய அந்த கார், பைக் மற்றும் கார்களை இடித்து தள்ளியப்படியே நிற்காமல் அசுர வேகத்தில் பறந்தது. இதனை கண்ட பொதுமக்கள் பதறியடித்து கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். கார் அடுத்தடுத்து இடித்ததில் பைக்கில் சென்ற 5 வாகன ஓட்டிகள் ஆங்காங்கே தூக்கி வீசப்பட்டு உயிருக்கு போராடினர்.ஆவேசமடைந்த பொதுமக்கள், விபத்து ஏற்படுத்திய காரை மடக்குவதற்கு பைக்கில் விரட்டி சென்றனர். ஒதியஞ்சாலை போலீஸ் ஸ்டேஷன் அருகே டயர் வெடித்தது. தொடர் விபத்து ஏற்படுத்திய காரை அங்கேயே மடக்கி பிடித்தனர். காரில் முழு போதையில் இருந்த டிரைவரை மக்கள் சூழ்ந்து கொண்டு தர்ம அடி கொடுத்தனர். காரையும் அடித்து நொறுக்கினர். சத்தம் கேட்டு ஓடி வந்த ஒதியஞ்சாலை போலீசார், பொதுமக்களிடமிருந்து கார் டிரைவரை மீட்டு போலீஸ் ஸ்டேஷனுக்குள் அழைத்து சென்றனர். விசாரணையில், குடிபோதையில் அடுத்தடுத்து சாலை விபத்துகளை ஏற்படுத்தியது தட்டாஞ்சாவடி காந்தி திருநல்லுாரை சேர்ந்த ரவுடி நண்டு ஆறுமுகம், 46, என்பதும், இவர் மீது கொலை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது. தொடர்ந்து, மேல் விசாரணைக்காக நண்டு ஆறுமுகம், கிழக்கு போக்குவரத்து போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.தொடர் விபத்தில், தேங்காய்த்திட்டை சேர்ந்த பிளஸ் 1 மாணவர் ஜாவத், 16; ரெஜிஸ்,18; சோழன், 47; தவளக்குப்பத்தை சேர்ந்த மணிகண்டன்,19; புதுச்சேரி தில்லைமேஸ்திரி வீதியை ஜோசப், 40, ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்கள் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், வ.உ.சி. பள்ளி பிளஸ் 1 மாணவர் ஜாவத்திற்கு பல் உடைந்து, சிகிச்சை பெற்று வருகிறார். போக்குவரத்து போலீசார் கூறும்போது, 'நான்கு கார்கள் மட்டுமின்றி 25க்கும் மேற்பட்ட பைக்குகள் சேதமடைந்துள்ளன. உரிமையாளர்கள் யார் என்பது உடனடியாக தெரியவில்லை. சேதமடைந்த வாகன உரிமையாளர்களிடம் புகார்களை பெற்று கணக்கெடுத்து வருகிறோம்' என்றனர். விபத்தை ஏற்படுத்திய ரவுடி நண்டு ஆறுமுகம் மீது இந்திய தண்டனை சட்டம் 279(அஜாக்கிரத்தையாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டுதல்),338 (கொடுங்காயம் ஏற்படுத்தல்), மோட்டார் வாகன சட்டம் 185(குடிபோதையில் வாகனம் ஓட்டுதல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.போலீசாருக்கு அர்ச்சனைகாரை ஓட்டி அடுத்தடுத்து தொடர் விபத்துகளை ஏற்படுத்திய ரவுடி நண்டு ஆறுமுகத்தை, போக்குவரத்து போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றதும், குடிபோதையில் வாந்தியெடுத்தார். அதனை கழுவிய போலீசார், அவரை அரசு பொதுமருத்துவமனைக்கு மருத்துவ சான்றிதழ்க்காக கொண்டு சென்றனர். ஆனால், துளியும் பயம் இல்லாமல் நண்டு ஆறுமுகம் போலீசாரை ஆபாசமாக திட்டியாவறு இருந்தார். என்.ஆர். காங்., பிரமுகர்: விபத்தினை ஏற்படுத்திய நண்டு ஆறுமுகம் என்.ஆர்.காங்., பிரமுகர் ஆவார். மருத்துவமனைக்கு நண்டு ஆறுமுகத்தை பார்க்க வந்த என்.ஆர். காங்., தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X