ராம காவியத்தில் கூறிய நல்லாட்சி புதுச்சேரியில் நடக்கிறது : கம்பன் விழாவில் தமிழிசை புகழாரம்

Added : மே 14, 2022
Advertisement
புதுச்சேரி--'பிற மொழிகளை கற்றால் தமிழ் எந்தவிதத்திலும் கரைந்து விடாது என்பதை கம்பர் நமக்கு கூறியுள்ளார்' என, கவர்னர் தமிழிசை பேசினார்.புதுச்சேரியில் கம்பன் விழாவை துவக்கி வைத்து கவர்னர் தமிழிசை பேசியதாவது:புதுச்சேரியில் யார் முதல்வராக இருக்கிறாரோ, அவர்தான் கம்பன் கழகத்தின் புரவலராக இருந்து, கம்பன் விழாவில் வரவேற்புரை ஆற்றுவர் என்று கூறினர். இந்த விழாவிற்கு
 ராம காவியத்தில் கூறிய நல்லாட்சி புதுச்சேரியில் நடக்கிறது : கம்பன் விழாவில் தமிழிசை புகழாரம்

புதுச்சேரி--'பிற மொழிகளை கற்றால் தமிழ் எந்தவிதத்திலும் கரைந்து விடாது என்பதை கம்பர் நமக்கு கூறியுள்ளார்' என, கவர்னர் தமிழிசை பேசினார்.

புதுச்சேரியில் கம்பன் விழாவை துவக்கி வைத்து கவர்னர் தமிழிசை பேசியதாவது:புதுச்சேரியில் யார் முதல்வராக இருக்கிறாரோ, அவர்தான் கம்பன் கழகத்தின் புரவலராக இருந்து, கம்பன் விழாவில் வரவேற்புரை ஆற்றுவர் என்று கூறினர். இந்த விழாவிற்கு எத்தனை சாமிகள் வந்தாலும், ரங்கசாமி இருப்பதுதான் சிறப்பு. ஏனென்றால், கம்ப ராமாயணத்தை கம்பர் எழுதி முடித்துவிட்டு, அதனை ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கசாமியிடம்தான் அரங்கேற்றினார்.

அதனால் முதல்வர் ரங்கசாமி இங்கு நிரந்தரமாக இருப்பதுதான் பொருத்தமாக இருக்கும். அதற்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பக்கபலமாக உள்ளார்.கம்பன் விழா எந்த விதத்திலும் தேய்ந்துவிடாமல் மூன்று நாட்கள் தொடர்ந்து மக்கள் கூட்டத்தோடு நடத்தப்படுவதுதான் புதுச்சேரியின் சிறப்பு. தமிழாக இருந்தாலும், சுதந்திர போராட்டமாக இருந்தாலும் புதுச்சேரிக்கு வந்து எல்லோரும் சிறப்புற்றார்கள். ஏனென்றால், துன்பப்படும் போதெல்லாம் நாம் தாய்மடியில் படுப்பதை போல், புதுச்சேரி தாய்மடியாக விளங்கிக் கொண்டிருக்கிறது.ராம காதையில் சொல் லப்பட்ட நல்லாட்சி புதுச்சேரியில் நடை பெறுகிறது.

தசரதனைப் பற்றி சொல்லும்போது 'தாய்க்கு நிகரான அன்பு' செலுத்துபவர் என்று சொல்லுவார் கம்பர். புதுச்சேரியிலும் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. கடந்த ஓராண்டாக முதல்வரும் அவரது தலைமையிலான அமைச்சரவையும் கம்பன் சொன்ன வழியில் அரசை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.கம்பன், ராம அவதாரத்தை தமிழில் எழுத வேண்டும் என்று நினைத்தார். ஆழ்வார்களில் ஆண்டாளிடம் இருந்து அந்த உந்துதலைப் பெற்றார். அதற்காக, முதலில் வடமொழி கற்று, வடமொழியிலிருந்த ராமாயணத்தைக் கற்று பிறகு நாமெல்லாம் பெருமைப்படும் கம்பராமாயணத்தை தமிழில் எழுதினார்.பிற மொழியைக் கற்றால் தமிழ் எந்த வகையிலும் கரைந்து விடாது என்பதை கம்பர் நமக்கு உணர்த்தி உள்ளார். தமிழை உலகிற்கு உணர்த்த வேண்டும். “சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்“ என்றார்

பாரதி.தாய்மொழி நமக்கு உயிர். அதை சரியாகப் படிக்காமல் பிற மொழியை நிந்திப்பது மொழிப்பற்று ஆகிவிடாது. தாய் மொழியில் வளம் பெற்று பக்கபலமாக இன் னொரு மொழியையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதைத்தான் நமது புதிய கல்வி கொள்கை கூறுகிறது.புதுச்சேரி அரசுக்கு தமிழ் பற்றைப் பற்றி யாரும் சொல்லி தர வேண்டியதில்லை. தமிழ் புதுச்சேரியில் விளையாடிக் கொண்டிருக்கிறது என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறேன். இதை ஏன் கூறுகிறேன் என்றால், ஜிப்மரில் பணிபுரிபவர்களில் 85 சதவீதத்தினர் இந்தி பேசுபவர்கள். அவர்களுக்காக சுற்றறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அதனை அரசியலாக்கி பலர் தினமும் போராட்டம் நடத்தி வருவது நோயாளிகளுக்கு மிகவும் தொந்தரவாக உள்ளது.

நேரில் சென்று ஆய்வு செய்து எந்தத் திணிப்பும் இல்லை என்று கூறிய பிறகும் அதை அரசியலாக்கி கொண்டுள்ளனர். எந்த விதத்திலும் தமிழுக்கு தலைக்குனிவு என்றால் புதுச்சேரி அரசு ஒப்புக் கொள்ளாது என்பதை மிகத்தெளிவாக பதிவிடுகிறேன். தமிழை விடுத்து யாரும் இங்கு வாழ்க்கை மேம்படுத்த முடியாது. தமிழ் நம் உயிரோடு நிற்கிறது. எனவே, தமிழை நாம் உயிராய் பாராட்டும்போது மற்றவர்களை நிந்திக்காமல் வாழ்வியலை புரிந்து கொண்டு வாழ்க்கையை நடத்துவோம். அதற்கு புதுச்சேரி அரசு எல்லா விதத்திலும் துணைபுரியும்.இவ்வாறு கவர்னர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X