கரிக்கலாம்பாக்கத்தில் தீமிதி உற்சவம்| Dinamalar

கரிக்கலாம்பாக்கத்தில் தீமிதி உற்சவம்

Added : மே 14, 2022 | |
புதுச்சேரி,-கரிக்கலாம்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி உற்சவம் நடந்தது.கரிக்கலாம்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி உற்சவம், கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மாலையில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது.கடந்த 10ம் தேதி பகாசூரனுக்கு அன்னமிடுதல் நிகழ்ச்சி, அர்ஜூனன், திரவுபதியம்மனுக்கு திருக்கல்யாணம், சிறப்பு

புதுச்சேரி,-கரிக்கலாம்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி உற்சவம் நடந்தது.கரிக்கலாம்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி உற்சவம், கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மாலையில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது.கடந்த 10ம் தேதி பகாசூரனுக்கு அன்னமிடுதல் நிகழ்ச்சி, அர்ஜூனன், திரவுபதியம்மனுக்கு திருக்கல்யாணம், சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. நேற்று காலை அரவாண் களபலி, படுகளம், மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.மாலையில் தீமிதி உற்சவம் நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். தொடர்ந்து, சுவாமி வீதியுலா நடந்தது. இன்று (14ம் தேதி) மஞ்சள் நீராட்டு உற்சவம், நாளை முத்துப்பல்லக்கில் வீதியுலா நடக்கிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X