திண்டுக்கல் : திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டை சுற்றி ஆக்கிரமித்துள்ள ரோட்டோர கடைகள், தள்ளுவண்டிகளால் அப்பகுதியில் தினமம் செல்வோர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.
திண்டுக்கல் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள இம்மார்க்கெட்டில் மொத்தம் விற்பனை, சில்லரை விற்பனை என 150 க்கு மேற்பட்ட கடைகள் உள்ளன. தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இது தவிர மார்க்கெட்டை சுற்றி தாலுகா அலுவலகம், ரதவீதி, பெரிய கடை வீதி நகைக்கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளன.போதாத குறைக்கு மார்க்கெட்டின் வெளிப்புறம், மார்க்கெட்டை சுற்றி ரோட்டோரத்தையும் ஆக்கிரமித்து காய்கறி, பழக்கடை, தள்ளுவண்டி கடைகள் அமைத்துள்ளனர்.
மார்க்கெட் வருவோர் மார்க்கெட் உள்ளேயே வாகன நிறுத்தும் இடம் இருந்தும் ரோட்டரங்களில் டூவீலரை நிறுத்துகின்றனர். குறிப்பிட்ட நேரம் மட்டுமின்றி அனைத்து நேரங்களிலும் மார்க்கெட்டை சுற்றிய பகுதிகளில் ரோட்டை ஆக்கிரமித்து சரக்கு வாகனங்ளை நிறுத்தி சரக்குகளை ஏற்றவும் இறக்கவும் செய்கின்றனர். இதனாலும் தினமும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. மேற்கு ரத வீதி, தாலுகா அலுவலகம் ரோடு வழியே மார்க்கெட் இருக்கும் பகுதியை கடந்து செல்வதற்குள் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு போதும் என்றாகி விடுகிறது. ஆக்கிரமிப்பை தடுக்க மாநகராட்சி,வருவாய்துறை,போலீசார் இணைந்து நிரந்தர தீர்வு காண வேண்டும். ரோட்டோரங்களில் வாகனம் நிறுத்துவது, குறிப்பிட்ட நேரம் அல்லாத நேரங்களில் சரக்குகளை ஏற்றி இறக்கும் வாகனங்களை போக்குவரத்து போலீசார் கண்காணித்து , மார்க்கெட் பகுதியை நெரிசல் இல்லா பகுதியாக மாற்ற முன் வர வேண்டும்.
-------------சுலபமாக செல்ல முடியல
ரவிக்குமார், பொருளாளர், நாகல்நகர் அனைத்து வியாபாரிகள் பாதுகாப்பு நலச்சங்கம்: காந்தி மார்க்கெட்டிற்கு சுலபமாக சென்று வர முடியவில்லை. ரோட்டோரங்களில் ஆக்கிரமிப்புகள் நிறைந்து காணப்படுகிறது. குறிப்பாக காலை 10:00 மணி முதல் மதியம் 1:30 மணி, மாலை 4:00 மணிமுதல் மாலை 6:00 மணி வரை போக்குவரத்து நெரிசல் உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.ரோடு சுருங்கி வருகிறதுமுருகன், பால் வியாபாரி, திண்டுக்கல்: மார்க்கெட்டிற்குள் செல்ல விடாமல் ரோட்டோரங்களில் கடை வைத்திருப்பவர்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். அப்பகுதியில் நடந்து செல்வதே சிரமமாக உள்ளது. ஆக்கிரமிப்புகளால் ரோடு சுருங்கி வருகிறது. போக்குவரத்து நெரிசலை நினைத்தாலே மார்க்கெட் செல்ல தயங்க வேண்டியுள்ளது.ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
நகர் முழுவதும் ஆக்கிரமிப்பு
கோவிந்தராஜ், சமூக ஆர்வலர், திண்டுக்கல்: காந்தி மார்க்கெட் மட்டுமின்றி கடைவீதி, ரதவீதிகள், ரவுண்ட் ரோடு உட்பட நகர் முழுவதும் ஆக்கிரமிப்புகள் நிறைந்து காணப்படுகிறது. அதிகாரிகள் பெயரளவிற்கு மட்டுமே ஆக்கிரமிப்புகளை அகற்றுகின்றனர். ஆக்கிரமிப்புகளால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதியுறுகின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடவடிக்கை எடுக்கிறோம்
சிவசுப்பிரமணியன், மாநகராட்சி கமிஷனர்: நகர் முழுவதும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காந்தி மார்க்கெட் பகுதியில் அடிக்கடி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகிறது.இருந்தும் மீண்டும் ஆக்கிரமிக்கின்றனர். மீறுவோருக்கு அபராதம் விதிப்பதுடன் பொருட்களும் பறிமுதல் செய்யப்படுகிறது. ஆக்கிரமிப்புகளை தடுக்க போலீசாரும் ஒத்துழைக்க வேண்டும். அப்போது தான் முழுமையாக ஆக்கிரமிப்புகளை தடுக்க முடியும்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement