புதுச்சேரி-புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக தகவல் தொழில்நுட்பத் துறையின் மாணவர் அத்தியாயம் மற்றும் மாணவர் சங்கம், ஐடெக் வெப் ஆகியவற்றின் துவக்க விழா நேற்று நடந்தது.தகவல் தொழில்நுட்பத் துறையின் தலைவர் பேராசிரியர் கோவிந்தசாமி தலைமை தாங்கி, தகவல் தொழில்நுட்பத்துறையின் நவீன வளர்ச்சிகள் குறித்து பட்டியலிட்டார். மாணவர் செயலாளர் மோனிகா இமானுவேல், ஐடெக் வெப் செயல்பாடுகள் குறித்து பேசினார். புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மோகன் சிறப்புரையாற்றி பேசும்போது, 'வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் உயர கனவு காண வேண்டும். அந்த இலக்கினை அடைவதற்கு கடினமாக உழைக்க வேண்டும்' என, வலியுறுத்தினார். டீன் கண்மணி வாழ்த்தி பேசினார். ஐ.பி.எம்., நிறுவன இணை இயக்குநர் பெரியசாமி கிரிராஜன் ஐரிசப்பன் சிறப்புரையாற்றினார். விழாவில் சைபர் செக்யூரிட்டி, டேட்டா சயின்ஸ், ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ், மெஷின் லேர்னிங், ஆட்டோமேஷன் தொழில்நுட்பம் குறித்து கல்லுாரி மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.தகவல் தொழில்நுட்பத் துறை பேராசிரியர் சாந்தி பாஸ்கரன், தகவல் தொழில்நுட்ப சங்க செயலாளர் நவீன் பரத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை முனைவர் பூபாலன் செய்திருந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE