போலீஸ் செய்திகள்

Added : மே 14, 2022
Advertisement
ரயிலில் பாய்ந்து தற்கொலைதிண்டுக்கல் : பிள்ளையார்நத்தத்தை சேர்ந்தவர் குமரகுருபரன் 65. கயிறு தயாரிக்கும் நிறுவனம் வைத்துள்ளார். நேற்று காலை 8:00 மணிக்கு ஒற்றைக்கண் பாலம் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தார். ரயில்வே போலீசார் கூறுகையில்,' கடன் பிரச்னை காரணமாக தற்கொலை செய்தது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது,' என்றனர்.ஒருவர் பலிநெய்க்காரப்பட்டி:

ரயிலில் பாய்ந்து தற்கொலை

திண்டுக்கல் : பிள்ளையார்நத்தத்தை சேர்ந்தவர் குமரகுருபரன் 65. கயிறு தயாரிக்கும் நிறுவனம் வைத்துள்ளார். நேற்று காலை 8:00 மணிக்கு ஒற்றைக்கண் பாலம் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தார். ரயில்வே போலீசார் கூறுகையில்,' கடன் பிரச்னை காரணமாக தற்கொலை செய்தது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது,' என்றனர்.

ஒருவர் பலி

நெய்க்காரப்பட்டி: நெய்க்காரப்பட்டி அருகே ஜீப் இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. காவலப்பட்டியை சேர்ந்த அன்பழகன் 38,காயம் அடைந்தார். கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். பழநி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

குளியலறையில் ரகசிய கேமரா: கைது

வத்தலக்குண்டு: இலங்கை அகதிகள் குடியிருப்பில் பெண்ணொருவர் வீட்டு குளியல் அறையில் குளிக்க சென்றபோது, கேமரா இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வத்தலக்குண்டு போலீசார் முகாமை சேர்ந்த விஜயகுமாரை 38, விசாரித்தனர் .யூ டியூப் மூலம் தானியங்கி கேமரா தயாரித்து அலைபேசி 'பவர் பேங்க்' 'மெமரி கார்டு' மூலம் காட்சிகள் பதிவாகும்படி வீட்டிற்குள் வைத்தது தெரிந்தது.அதன்படி விஜயகுமாரை போலீசார் கைது செய்தனர்.

கடையில் தீ

எரியோடு:நல்லமனார்கோட்டை மாயழகனுாரை காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம் 63. தொட்டணம்பட்டி பாலம் அருகே பெட்டிக்கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் கடை எரிந்தது . எரியோடு போலீசார் விசாரிக்கின்றனர்.

கட்டிப்புரண்டு சண்டை; கைது

நிலக்கோட்டை: ஜெயநாயக்கன் பட்டியை சேர்ந்த பாண்டி 24,உச்சபட்டியை சேர்ந்த வினோத் 22, இருவரும், நால்ரோடு பஸ் நிறுத்தம் அருகே ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு கட்டிப்புரண்டு சண்டையிட்டனர். இருவரையும் எஸ்.ஐ. ,மயில்ராஜ் கைது செய்தார்.

கஞ்சா விற்றவர்கள் ஓட்டம்

நிலக்கோட்டை : மேட்டுதெருவைச் சேர்ந்த அஜித்குமார், சங்கர் ஆகியோர் புதுத்தெருவில் கஞ்சா விற்பதாக தகவல் கிடைத்தது. எஸ்.ஐ., பாலமுத்தையா சென்ற போது இருவரும் தப்பினர். இருவரும் விட்டு சென்ற ஒரு கிலோ கஞ்சாவை கைப்பற்றினார்.

டூவீலர் மோதி தொழிலாளி பலி

குஜிலியம்பாறை : தேனி மாவட்டம் பெரியகுளம் புல்லக்காபட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி 35. குஜிலியம்பாறையில் உள்ள தனியார் ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு நடந்து சென்ற போது , குஜிலியம்பாறையைச் சேர்ந்த அஜய்குமார் ஓட்டி சென்ற டூவீலர் மோதியது. திருச்சி அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட நிலையில் இறந்தார். குஜிலியம்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.

அடையாளம் தெரியாத உடல்

பழநி: பட்டாலியன் கேம்ப் பின்புறம் உள்ள மரத்தில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் துாக்கில் தொங்கியபடி இருந்தது. கருப்பு சட்டை அணிந்திந்தார் .பழநி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

நகை திருடிய மூவர் கைது

பழநி : லட்சுமிபுரம் பகுதியில் அப்புகதியை சேர்ந்த தங்கபொண்ணு 38, நடந்த வந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் 3 பவுன் செயினை பறித்து சென்றனர். சிசிடிவி பதிவுப்படி பழநி டவுன் போலீசார் ,சிவகிரி பட்டியைச் சேர்ந்த ரஞ்சித் 25,மதுரை கரும்பாலை பகுதியை சேர்ந்த தனபாண்டி 22, பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த விக்னேஸ்வரன் 21,ஆகியோரை கைது செய்தனர் . 3 பவுன் செயின, மரடி மதுரையில் திருடப்பட்ட இரு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

குட்கா கடைக்கு சீல்

வத்தலக்குண்டு: டீக்கடை ஒன்றில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை விற்பனை செய்யப்படுவதாக போலீசார் சோதனை செய்தனர். இரண்டரை கிலோ குட்கா கண்டுபிடிக்கப்பட்டு, விற்ற மணி கைது செய்யப்பட்டார். அஜ்மல் தலைமறைவானார். டீக்கடை வருவாய் துறை மூலம் சீல் வைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X