கன்னிவாடி : விபத்து அபாயத்தில் பயணித்த செம்மண் லாரிகளை ஸ்ரீராமபுரம் அருகே பொதுமக்கள் சிறைப்பிடித்தனர்.
மெட்டூர்-பலக்கனுாத்து நான்கு வழிச்சாலை பணிக்காக பண்புகள், சந்தமநாயக்கன்பட்டி, புதுப்பாலம் பகுதியிலிருந்து செம்மண், கிராவல் மண் டிப்பர் லாரிகள் மூலம் எடுத்து செல்லப்படுகிறது. இவை போதிய பாதுகாப்பற்ற சூழலில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் உயரத்திற்கு ஏற்றிச் செல்கின்றனர். மெயின் ரோட்டில் மண் சிதறி செல்வதுடன் விபத்து அபாயத்தில் அசுர வேக பயணமும் தொடர்வதாக புகார் நீடிக்கிறது.
ஆவேசமடைந்த பொதுமக்கள், மார்க்சிஸ்ட் ஒன்றியக்குழு உறுப்பினர் ஆதம்சேட் தலைமையில் ஸ்ரீராமபுரம் அருகே கருப்பிமடத்தில் காத்திருந்தனர். அவ்வழியே வந்த 8 டிப்பர் லாரிகளை சிறை பிடித்தனர். நான்குவழிச்சாலை பணி உதவி பொறியாளர் பூபாலன் பேச்சுவார்த்தை நடத்தினார். உரிய பாதுகாப்பு அம்சங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என உறுதி அளித்ததால் லாரிகள் விடுவிக்கப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE