வடமதுரை : திண்டுக்கல் மாவட்டத்தில் தக்காளி வர்த்தகத்திற்கு பிரபலமான ஊர்களில் அய்யலுாரும் ஒன்று. இங்குள்ள கமிஷன் மண்டிகளுக்கு தக்காளி வந்து வியாபாரிகளுக்கு கைமாறி செல்லும். இரு மாதங்களுக்கு முன்பு அதிக வரத்து காரணமாக 15 கிலோ எடை கொண்ட வீரிய ரக தக்காளி பெட்டி ஒன்றிற்கு ரூ.40 என்றளவில் கொள்முதல் விலை வீழ்ச்சி அடைந்திருந்தது.
சில்லறை விற்பனையில் கிலோ ரூ.5 முதல் 10 வரை விற்கப்பட்டது. தற்போது மழை பாதிப்பு காரணமாக வரத்து வெகுவாக குறைந்ததால் நேற்று தக்காளி பெட்டி ஒன்றிற்கு ரூ.900 முதல் ரூ.1300 வரை கொள்முதல் விலை கிடைத்தது. சில்லறை விற்பனையில் ஒரு வாரமாக கிலோ ரூ.60 முதல் 70 என உயர்ந்திருக்கும் நிலையில் மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement