மாநில திறனறிதல் போட்டி
திண்டுக்கல்: திண்டுக்கல் பார்வதீஸ் கல்லுாரியில் மாநில அளவில் கல்லுாரிகளுக்கிடையிலான திறனறிதல் போட்டி நடந்தது. சிறப்பு விருந்தினராக சென்னை எஸ்.ஆர்.எம். கல்லுாரியின் பேஷன் டெக்னாலஜி துறை தலைவர் உமா மகேஸ்வரி கலந்துகொண்டார். கல்லுாரி முதல்வர் சுகுமார் தலைமை வகித்தார். இப்போட்டியில் பத்துக்கும் மேற்பட்ட கல்லுாரிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர். எம்.வி.எம். கல்லுாரி ஓவர் ஆல் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது....................
பன்னாட்டு பயிலரங்கம்
திண்டுக்கல்: நாடகக் கலை இலக்கியம் தொடர்பாக ஒருநாள் பன்னாட்டு பயிலரங்கம், பார்வதீஸ் கல்லுாரியின் தமிழ்துறை சார்பில் நடந்தது. கல்லுாரி முதல்வர் சுகுமார் தலைமை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் கலைவாணி வரவேற்றார். துணை முதல்வர் சீனிவாசன் பேசினார். சிறப்பு விருந்தினராக இலங்கை கிழக்கு பல்கலை நுண் கலைத்துறையின் நாடக செயற்பாட்டாளர் சுந்தரலிங்கம் சந்திரகுமார் பேசினர். திண்டுக்கல் ஜி.டி.என்.கல்லுாரி தமிழ் துறை உதவி பேராசிரியர் முத்துலட்சுமி பேசினார். தமிழ்துறை உதவி பேராசிரியர் ஜெயசங்கர், ேஹமலதா கலந்துகொண்டனர். உதவி பேராசிரியர் கீதா நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE