புதுச்சேரி,-''எங்கும் தமிழ், எதிலும் தமிழ்' என்ற நிலையில் புதுச்சேரி இருந்து கொண்டுள்ளது' என, முதல்வர் ரங்கசாமி பேசினார்.புதுச்சேரி கம்பன் கழகம் சார்பில் நடந்த 55ம் ஆண்டு கம்பன் விழாவில் முதல்வர் ரங்கசாமி வரவேற்று பேசியதாவது:கம்பன் புகழ்பாடி கன்னி தமிழ் வளர்ப்போம் என்ற எண்ணத்தில் புதுச்சேரி கம்பன் கழகம், ஒவ்வொரு ஆண்டும் மூன்று நாட்களுக்கு கம்பன் விழாவை சிறப்பாக கொண்டாடி வருகிறது. இது, புதுச்சேரிக்கு மிகவும் பெருமை சேர்க்கின்ற ஒன்றாகும். 'எங்கும் தமிழ், எதிலும் தமிழ்' என்ற நிலையில் புதுச்சேரி இருந்து கொண்டுள்ளது.எந்த நிலையிலும் சீர்குலையாமல், எல்லோரும் பாராட்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கம்பன் கழக பொறுப்பாளர்கள் இவ்விழாவை நடத்தி கொண்டுள்ளனர். இந்த கழகம் ஒரு எடுத்துக்கட்டாக கம்பன் விழாவை கொண்டாடி வருகிறது. இந்த விழாவுக்கு எப்போதும் பெருந்திரளாக வந்து சிறப்பிக்கும் சான்றோர்களுக்கும், புலவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு, முதல்வர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE