கிரிக்கெட் லீக் போட்டி

Added : மே 14, 2022
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம், டேக் சார்பில் நடந்த லீக் போட்டிகளில் ஆர்.வி.எஸ்., கல்லுாரியில் நடந்த 2வது டிவிஷன் பிரசித்தி வித்யோதயா டிராபி போட்டியில் திண்டுக்கல் ஆரஞ்ச் ஷர்ட்ஸ் 30 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்து வென்றது. விஸ்வநாதன் 34, வெங்கடேஷ் 48 ரன்கள் எடுத்தனர். எதிர்த்து ஆடிய ஒட்டன்சத்திரம் சாமுராய் அணி 29.2 ஓவரில் அனைத்து

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம், டேக் சார்பில் நடந்த லீக் போட்டிகளில் ஆர்.வி.எஸ்., கல்லுாரியில் நடந்த 2வது டிவிஷன் பிரசித்தி வித்யோதயா டிராபி போட்டியில் திண்டுக்கல் ஆரஞ்ச் ஷர்ட்ஸ் 30 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்து வென்றது. விஸ்வநாதன் 34, வெங்கடேஷ் 48 ரன்கள் எடுத்தனர்.

எதிர்த்து ஆடிய ஒட்டன்சத்திரம் சாமுராய் அணி 29.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. வெங்கடேஷ் கவுதம் 39 ரன், அருண்குமார் 5 விக்கெட் எடுத்தனர். மற்றொரு போட்டியில் திண்டுக்கல் வெற்றி அணி 25 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்தது. அற்புதராஜ் 35 ரன், ரோஷன் 3 விக்கெட் எடுத்தனர். எதிர்த்து ஆடிய திண்டுக்கல் ஆர்.வி.எஸ்., ஸ்போர்ட்ஸ் கிளப் 17 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்து வென்றது. ஹரி கிருஷ்ணா 33 ரன் எடுத்தார். பி.எஸ்.என்.ஏ., கல்லுாரியில் நடந்த 3 வது டிவிஷன் ஓட்டல் பார்சன் கோர்ட் டிராபி போட்டியில் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., 29.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 186 ரன்களுக்கு வென்றது. சதீஷ்குமார் 62, ஸ்ரீ வெங்கட்ரமணன் 44, விக்னேஷ்வர் 31 ரன்கள், தர்மராஜ் 3 விக்கெட் எடுத்தனர். அடுத்து ஆடிய திண்டுக்கல் சாம்பியன்ஸ் 29.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 182 ரன்களுக்கு தோற்றது. சரவணகுமார் 32, சண்முகசுந்தரம் 52 ரன், முத்துகாமாட்சி 4 விக்கெட் எடுத்தனர்.மற்றொரு போட்டியில் பழநி சுப்ரமண்யா 25 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. அருண் பிரசாந்த் 31, சண்முகா 42 ரன், யுவராஜ் 3 விக்கெட் எடுத்தனர். அடுத்து ஆடிய ஓட்டன்சத்திரம் நைக் அணி 19 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் எடுத்து வென்றது. விக்வேஸ்வரன் 35 ரன், அஜீத்மணி 70 ரன்னுடன் அவுட்டாக வில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X