பொது செய்தி

தமிழ்நாடு

பிள்ளையார்பட்டியில் ஆக.,31ல் தேரோட்டம்

Added : ஆக 28, 2011
Share
Advertisement
திருப்புத்தூர்: பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, வரும் 31ல் தேரோட்டமும், சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெறும். இக்கோயிலில் சதுர்த்தி விழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை 9.30 மணிக்கு வெள்ளி கேடகத்தில் விநாயகர் வலம் வருவார். இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறும். தேரோட்டம்: நேற்று, மாலை 5 மணிக்கு
Pillaiyarpatti Car Festival on Aug 31, பிள்ளையார்பட்டியில் ஆக.,31ல் தேரோட்டம்

திருப்புத்தூர்: பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, வரும் 31ல் தேரோட்டமும், சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெறும். இக்கோயிலில் சதுர்த்தி விழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை 9.30 மணிக்கு வெள்ளி கேடகத்தில் விநாயகர் வலம் வருவார். இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.

தேரோட்டம்: நேற்று, மாலை 5 மணிக்கு யானை முகம் கொண்ட சூரனை விநாயகர் வதம் செய்யும், கஜமுகாசூரசம்ஹாரம் நடந்தது. இன்று மாலை 3 மணிக்கு, தேரோட்டத்திற்கான முகூர்த்தக்கால் ஊண்டப்படும்.


வரும் 31 அன்று காலை 9.20 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில், கற்பகவிநாயகர் எழுந்தருள்வார். மாலை 4 மணிக்கு தேரோட்டம்நடக்கும். அதைதொடர்ந்து மாலை 4.30 முதல் இரவு 10 மணி வரை ஆண்டிற்கு ஒரு முறை நடக்கும் மூலவர் சன்னதியில் உள்ள கற்பகவிநாயகருக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடைபெறும்.




Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X