ஒட்டன்சதிரம் : திண்டுக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் ஒட்டன்சத்திரத்தில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
நகர செயலாளர் வெள்ளைச்சாமி வரவேற்றார். மாவட்ட அவைத்தலைவர் மோகன், மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி, ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜன் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் மேற்கு மாவட்டச்செயலாளரும் அமைச்சருமான சக்கரபாணி தலைமை வகித்து பேசியதாவது:
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகள் டெல்லியில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளைப் போல் தரம் உயர்த்தப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். ஒட்டன்சத்திரம் தொகுதியில் 25 முழு ரேஷன் கடைகள் கொண்டுவரப்பட்டுள்ளது. 234 சட்டசபை தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு 10 திட்டம் செயல்படுத்தபடும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
லெக்கையன் கோட்டையில் இருந்து அரசப்பபிள்ளைபட்டி வரை அமைய உள்ள நான்கு வழி சாலைக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் மேற்கொள்ளப்படும், என்றார். எம்.பி.,க்கள் திருச்சி சிவா, வேலுச்சாமி, பேச்சாளர் தனபால் பேசினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE