புதுச்சேரியில் கம்பன் விழா: கவர்னர் துவக்கி வைப்பு

Added : மே 14, 2022
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரி கம்பன் கழகத்தின் சார்பில் 55ம் ஆண்டு 'கம்பன் விழா, கம்பன் கலையரங்கத்தில் நேற்று துவங்கியது. விழாவை, கவர்னர் தமிழிசை துவக்கி வைத்தார்.விழாவிற்கு உச்ச நீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியன் தலைமை தாங்கினார். ஜெகதீசன் மலர் வணக்கம் செலுத்தினார். முதல்வர் ரங்கசாமி வரவேற்றார்.கவர்னர் தமிழிசை, கம்பன் கழகத்தின் மறைந்த நிர்வாகிகள் படங்களை திறந்து வைத்தார்;

புதுச்சேரி-புதுச்சேரி கம்பன் கழகத்தின் சார்பில் 55ம் ஆண்டு 'கம்பன் விழா, கம்பன் கலையரங்கத்தில் நேற்று துவங்கியது. விழாவை, கவர்னர் தமிழிசை துவக்கி வைத்தார்.விழாவிற்கு உச்ச நீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியன் தலைமை தாங்கினார். ஜெகதீசன் மலர் வணக்கம் செலுத்தினார். முதல்வர் ரங்கசாமி வரவேற்றார்.கவர்னர் தமிழிசை, கம்பன் கழகத்தின் மறைந்த நிர்வாகிகள் படங்களை திறந்து வைத்தார்; விழாவை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.சபாநாயகர் செல்வம், விழா மலரை வெளியிட்டு, தமிழறிஞர்கள் ராமலிங்கம், வத்சலா கோவிந்தராஜலு, ரவீந்திரன் ஆகியோருக்கு அறக்கட்டளை பரிசுகளை வழங்கினார்.அமைச்சர் நமச்சிவாயம், 'ராம காதை-முதலும் வழியும்' சுந்தரகாண்டம், யுத்தகாண்டம், 'உள்ளம் கவர் கம்பன்', 'அழகுக்கு அழகு', 'பெண்மையைப் போற்றும் கம்பன்', ஆகிய நுால்களை வெளியிட்டார். அதனை முறையே சுவிட்சர்லாந்து சரஹணபவானந்த குருக்கள், மாது, கோவிந்த திருநாவுக்கரசு, அந்தோணி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து, கம்பன் கழகம் நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு அமைச்சர் பரிசு வழங்கினார்.விழாவில் செல்வகணபதி எம்.பி., அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., கம்பன் கழக செயலாளர் சிவக்கொழுந்து உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தமிழறிஞர்கள் கலந்து கொண்டனர். துவக்க விழாவை தொடர்ந்து, 'காலமும் கணக்கும் நீத்த காரணன்' என்ற தலைப்பில் சுகிசிவத்தின் சொற்பொழிவு நடைபெற்றது.மாலையில் 'அன்பு உருக்கொண்டது' என்ற தலைப்பில் பேராசிரியர் அப்துல்காதர் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து 'மும்மைத்தன்மை ராமன்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கிற்கு பேராசிரியர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். தனயன் ராமன் என்ற தலைப்பில் ராமலிங்கமும், தமையன் ராமன் என்ற தலைப்பில் சுமதியும், தலைவன் ராமன் என்ற தலைப்பில் அறிவொளி கருத்துரையாற்றினர்.இரண்டாம் நாளான இன்று காலை இளையோர் அரங்கம், மற்றும் வழக்காடு மன்றமும், மாலையில் கவியரங்கம் மற்றும் பட்டிமன்றம் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X