தாய்ப்பால் விழிப்புணர்வு நிகழ்ச்சி| Dinamalar

தாய்ப்பால் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Added : மே 14, 2022 | |
புதுச்சேரி-லாஸ்பேட்டையில் தாய்ப்பால் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.லாஸ்பேட்டை மகாவீர் நகர் நலவாழ்வு சங்கம், நியூ பார்ன் யங் சைல்டு பீடிங் பவுண்டேஷன், நந்தா ஜெய ஸ்ரீதரன் மக்கள் நல சேவை இயக்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து அன்னையர் தின விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தன. இதனையொட்டி, தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு முகாம் மகாவீர் நகரில் நடந்தது.விழாவில் சுகாதாரத்துறை

புதுச்சேரி-லாஸ்பேட்டையில் தாய்ப்பால் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.லாஸ்பேட்டை மகாவீர் நகர் நலவாழ்வு சங்கம், நியூ பார்ன் யங் சைல்டு பீடிங் பவுண்டேஷன், நந்தா ஜெய ஸ்ரீதரன் மக்கள் நல சேவை இயக்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து அன்னையர் தின விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தன. இதனையொட்டி, தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு முகாம் மகாவீர் நகரில் நடந்தது.விழாவில் சுகாதாரத்துறை உதவி இயக்குனர் முரளி, என்.ஆர். காங்., பிரமுகர் நந்தா ஜெய ஸ்ரீதரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தனர். மகாவீர் நகர் மக்கள் நலவாழ்வு சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜனார்த்தனன், லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தின் சிறப்பு மருத்துவர் நளினி, மருத்துவர் கயல்விழி சிறப்புரையாற்றினர்.மகாவீர் நகர் மக்கள் நல்வாழ்வு நிர்வாகி திருநாவுக்கரசு நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X