வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வேடசந்துார்: ''தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் அரசு அல்ல. ராஜபக்சே மாடல் அரசு,''என, ஹிந்து தமிழர் கட்சியின் மாநில நிறுவனத்தலைவர் ராம.ரவிக்குமார் தெரிவித்தார்.
வேடசந்துாரில் அவர் கூறியதாவது: சென்னை ஓமந்துாரார் பல்நோக்கு அரசு மருத்துவமனை வளாகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை வைக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும். ஓமந்துாரார் பெயரை மாற்றி, கருணாநிதி பெயர் வைக்கும் முன் முயற்சியாக இது இருக்கலாம். இலங்கையில் குடும்ப ஆட்சியால் பொருளாதார சீரழிவு உருவாகியுள்ளது.

தமிழகத்திலும் முதல்வர் ஸ்டாலின் குடும்ப அரசியலால் சிக்கல் உருவாகலாம். இது திராவிட மாடல் அரசு அல்ல. ராஜபக்சே மாடல் அரசு. திருவாரூர் தெற்கு ரதவீதிக்கு கருணாநிதி பெயர் வைக்க முயற்சிப்பதை எதிர்க்கிறோம். பசுமாடுகளை காப்பதற்கு ஒருபுறம் கோசாலைகள், மறுபுறம் மாட்டுக்கறி பிரியாணி விழா நடத்துவது என்பதெல்லாம் ஏமாற்று வேலையாகவே தெரிகிறது, என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE