புதுச்சேரி,-வில்லியனுார் மற்றும் கிருமாம்பாக்கம் கணினி பயிற்சி மையங்களில் கணினி பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.புதுச்சேரி பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழகம் சார்பில், வில்லியனுார் மற்றும் கிருமாம்பாக்கம் ஆகிய இடங்களில் கணினி பயிற்சி மையங்கள் இயங்கி வருகிறது. இங்கு, மத்திய அரசின் மேம்பாட்டுத் துறையின் தேசிய திறந்தவெளிப் பள்ளி நிறுவன அங்கீகாரத்துடன் பல வகையான 6 மாத தொழிற்சார்ந்த கணினி பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இக்கணினி பயிற்சி சேர்க்கைக்கு புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின ஆண்கள், பெண்கள், மாணவ, மாணவியரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. நேரடி சேர்க்கை நேற்று துவங்கி, ஜூன் 10ம் தேதி வரை நடக்கிறது. எனவே, கணினி பயிற்சியில் சேர விரும்புவோர் அருகில் உள்ள கணினி மையங்களை தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.மேலும், விவரங்களுக்கு கணினி பயிற்சி மையங்கள் வில்லியனுார் 0413-2666767, கிரும்பாக்கம் 0413-2611776 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குனர் பத்மாவதி தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE