வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 'தென்மேற்கு பருவமழை நாளை துவங்கும்' என, அகில இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. இது தவிர, நான்கு நாட்களுக்கு பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கப் பட்டுள்ளது. ஆறு மாவட்டங்களில், இன்று(மே 14) மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சியால், கேரளா, லட்சத்தீவு, குமரிக்கடல், மன்னார் வளைகுடா, இலங்கை பகுதிகளில், மணிக்கு 50 கி.மீ., வேகத்தில், இன்று சூறாவளி காற்று வீசும். எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

சேலம், தர்மபுரி, திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலுார் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். சென்னையில் இன்று மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யும். கரூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலுார், கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழை பெய்யும்.
நாளை திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, புதுக்கோட்டை, திருச்சி, அரியலுார், பெரம்பலுார், திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர், கோவை, கரூர், நாமக்கல், சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில், கனமழை பெய்யும். நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில், வரும், 16, 17ம் தேதிகளில் கனமழை பெய்யும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE