ஜூலை 15 முதல் ரூ.1000

Updated : மே 14, 2022 | Added : மே 14, 2022 | கருத்துகள் (1)
Advertisement
சென்னை: பெண்களுக்கான உயர்கல்வி உதவித் தொகையான 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ல் துவக்க அரசு திட்டமிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை படித்தவர்கள் மட்டுமே பயன்பெற முடியும்.பட்டம் மற்றும் முதுநிலை பட்டப் படிப்பிற்கு செல்லும் அனைத்து மாணவியருக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 1000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்
ஜூலை 15 முதல் ரூ.1000

சென்னை: பெண்களுக்கான உயர்கல்வி உதவித் தொகையான 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ல் துவக்க அரசு திட்டமிட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை படித்தவர்கள் மட்டுமே பயன்பெற முடியும்.பட்டம் மற்றும் முதுநிலை பட்டப் படிப்பிற்கு செல்லும் அனைத்து மாணவியருக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 1000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும் என எதிர்பார்க்கப் பட்டது.ஆனால் தற்போதைய நிலையில் அரசு பள்ளிகளில் ஆறு முதல் பிளஸ் 2 வரை படித்த மாணவியருக்கு மட்டுமே இந்த உதவி தொகையை வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதற்காக ஆறு முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளிகளில் படித்து தற்போது கல்லுாரிகளில் பட்ட படிப்பில் உள்ள மாணவியரின் விபரங்களை மட்டும் உயர்கல்வி துறை பட்டியல் எடுத்து வருகிறது. இந்த திட்டம் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ல் துவங்க உயர்கல்வி துறை திட்டமிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
14-மே-202207:11:56 IST Report Abuse
duruvasar தாலிக்கு தங்க திட்ட செலவு 90000 ரூபாய், அதை நிறுத்தி இந்த மாதம் 1000 ரூபாய் திட்டத்தில் செலவு 36000 ஆக நிகர லாபம் 44000. மக்களை முட்டாளாக்குவதுதான் திராவிட மாடல். காடடுமிராண்டிகளை முட்டாள்களாக வரும் வைத்திருக்கும் அசகாய திட்டம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X