உசிலம்பட்டி : உசிலம்பட்டி நகராட்சி வளர்ச்சி பணிகள் குறித்து நகராட்சிகள் நிர்வாக இயக்குனர் பொன்னையா ஆய்வு செய்தார்.
நகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகள், கவுன்சிலர்கள், கட்சி பிரமுகர்களிடம் ஆலோசனை நடத்தினார். நகராட்சிக்கு கமிஷனர் நியமிக்க வேண்டும். கண்மாய்களில் கழிவுநீர் கலப்பதை தடுத்து சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும், உ. வாடிப்பட்டி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் குப்பை எரிப்பதை தவிர்த்து உரமாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.எம்.எல்.ஏ., அய்யப்பன், நகராட்சி தலைவர் சகுந்தலா, துணைத் தலைவர் தேன்மொழி, மண்டல இயக்குனர் சரவணன், செயற்பொறியாளர் முருகேசன், கமிஷனர் (பொறுப்பு) முத்து பங்கேற்றனர்.
திருமங்கலம்பழைய பஸ் ஸ்டாண்டை விரிவாக்கம் செய்ய பொன்னையா ஆய்வு செய்தார். மேலும் காய்கறி மார்க்கெட், பூ மார்க்கெட், ஆடு வதைக்கூடம் போன்றவற்றை ஆய்வு செய்தார். நகராட்சி தலைவர் ரம்யா, துணைத்தலைவர் ஆதவன், பொறியாளர் ரத்தினவேல், கவுன்சிலர்கள் திருக்குமார், வீரகுமார் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE