பிற மொழிகளையும் கற்க வேண்டும்: கவர்னர் தமிழிசை அறிவுரை!

Updated : மே 14, 2022 | Added : மே 14, 2022 | கருத்துகள் (16)
Advertisement
புதுச்சேரி : ''பிற மொழிகளை கற்றால் தமிழ் எந்த விதத்திலும் கரைந்து விடாது என்பதை கம்பர் நமக்கு கூறியுள்ளார்,'' என, கவர்னர் தமிழிசை பேசினார்.புதுச்சேரியில் கம்பன் விழாவை துவக்கி வைத்து, கவர்னர் தமிழிசை பேசியதாவது: இந்த விழாவிற்கு எத்தனை சாமிகள் வந்தாலும், ரங்கசாமி இருப்பது தான் சிறப்பு. ஏனென்றால், கம்ப ராமாயணத்தை கம்பர் எழுதி முடித்துவிட்டு, ஸ்ரீரங்கத்தில் உள்ள
Tamil, Hindi, Tamilisai, Tamilisai Soundararajan

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுச்சேரி : ''பிற மொழிகளை கற்றால் தமிழ் எந்த விதத்திலும் கரைந்து விடாது என்பதை கம்பர் நமக்கு கூறியுள்ளார்,'' என, கவர்னர் தமிழிசை பேசினார்.

புதுச்சேரியில் கம்பன் விழாவை துவக்கி வைத்து, கவர்னர் தமிழிசை பேசியதாவது: இந்த விழாவிற்கு எத்தனை சாமிகள் வந்தாலும், ரங்கசாமி இருப்பது தான் சிறப்பு. ஏனென்றால், கம்ப ராமாயணத்தை கம்பர் எழுதி முடித்துவிட்டு, ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கசாமியிடம் தான் அரங்கேற்றினார்.அதனால் முதல்வர் ரங்கசாமி இங்கு நிரந்தரமாக இருப்பது தான் பொருத்தமாக இருக்கும். அதற்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பக்கபலமாக உள்ளார்.


latest tamil news



ராம காதையில் சொல்லப்பட்ட நல்லாட்சி, புதுச்சேரியில் நடைபெறுகிறது. ஓராண்டாக முதல்வரும் அவரது தலைமையிலான அமைச்சரவையும், கம்பன் சொன்ன, 'தாய் ஒக்கும் அரசை' நடத்திக் கொண்டிருக்கின்றனர். கம்பன், ராம அவதாரத்தை தமிழில் எழுத வேண்டும் என்று நினைத்தார். ஆழ்வார்களில் ஆண்டாளிடம் இருந்து அந்த உந்துதலைப் பெற்றார்.

அதற்காக, முதலில் வடமொழி கற்று, வடமொழியிலிருந்த ராமாயணத்தைக் கற்று, பிறகு நாமெல்லாம் பெருமைப்படும் கம்ப ராமாயணத்தை தமிழில் எழுதினார். பிற மொழியைக் கற்றால், தமிழ் எந்த வகையிலும் கரைந்து விடாது என்பதை, கம்பர் நமக்கு உணர்த்தி உள்ளார்.தாய்மொழி நமக்கு உயிர். அதை சரியாகப் படிக்காமல் பிற மொழியை நிந்திப்பது மொழிப்பற்று ஆகிவிடாது.

தாய் மொழியில் வளம் பெற்று பக்கபலமாக இன்னொரு மொழியையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை தான், நம் புதிய கல்விக் கொள்கை கூறுகிறது. இவ்வாறு தமிழிசை பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Surbra Mani - EL PASO,யூ.எஸ்.ஏ
14-மே-202218:50:13 IST Report Abuse
Surbra Mani நீங்கள் குமரி அனந்தன் அவர்களின் மகள் என்று சொல்ல வெட்கப்பட வேண்டும்.
Rate this:
Cancel
Surbra Mani - EL PASO,யூ.எஸ்.ஏ
14-மே-202218:46:51 IST Report Abuse
Surbra Mani neengal
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
14-மே-202217:42:19 IST Report Abuse
Rafi இந்தம்மாவுக்கு இந்தி தெரியுமா? இந்தி கற்பதால் தமிழர்களின் வாழ்வாதாரம் உயர்ந்து வட மாநிலம் சென்று கூலி வேலைக்கு ஆட்கள் எடுக்கின்றார்களா? அந்த வேலைக்காவது வாய்ப்புக்கா என்று சிந்தித்தால் அதற்கும் வழி இல்லை அங்கிருந்தல்லவா? கூட்டம் கூட்டம்மாக இங்கல்லவா வந்து கொண்டிருக்கின்றார்கள்? பொருளாதாரம் உயர்ந்து விடும்மா? நாட்டின் பிரச்சனைகள் தீர்ந்து விலைவாசிகள் குறைந்து விடுமா? நாட்டில் அதிமுக்கிய பிரச்சனையா இந்தி படிப்பது? கவர்னரிலிருந்து, ஒன்றிய அமைச்சர்கள் வரை ஒரே கோரஸாக இருக்கே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X