சேறும், சகதியுமாக மாறிய சாலை

Added : மே 14, 2022
Advertisement
திருபுவனை-மதகடிப்பட்டு-மடுகரை சாலை 10 நாட்களாக துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், மாற்றுப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் சந்தைதோப்பு பகுதி சேறும், சகதியுமாக மாறி உள்ளதால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்குவழிச்சாலை விரிவாக்கப் பணி, கடந்த 6 மாதங்களாக நடந்து வருகிறது. இதற்காக சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் வாய்க்கால் கட்டப்பட்டு

திருபுவனை-மதகடிப்பட்டு-மடுகரை சாலை 10 நாட்களாக துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், மாற்றுப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் சந்தைதோப்பு பகுதி சேறும், சகதியுமாக மாறி உள்ளதால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்குவழிச்சாலை விரிவாக்கப் பணி, கடந்த 6 மாதங்களாக நடந்து வருகிறது. இதற்காக சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் வாய்க்கால் கட்டப்பட்டு வருகிறது.இந்த பணிக்காக மதகடிப்பட்டு நான்குமுனையில் மடுகரை சாலை சந்திப்பில், கடந்த 10 நாட்களுக்கு முன் ஜே.சி.பி., மூலம் பள்ளம் தோண்டி துண்டிக்கப்பட்டது.இதனால், மடுகரை, பண்ருட்டி, கடலுார் பகுதிக்குச் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி, கல்லுாரி பஸ்கள் மற்றும் வேன்கள், நெட்டப்பாக்கம் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு சரக்கு ஏற்ற, இறக்கச் செல்லும் லாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகன ஓட்டிகள் மதகடிப்பட்டு வாரச்சந்தை மற்றும் அங்காளம்மன் கோவில் வழியாக சென்று வருகின்றனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்த திடீர் மழையால் சந்தைதோப்பு வாரச்சந்தை பகுதி சேறும் சகதியுமாக மாறியது. இதனால், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பலர் சேற்றில் வழுக்கி விழுகின்றனர். இந்த பகுதியை உடனடியாக சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X