காரைக்கால்-'இலங்கையில் உள்ள தமிழக மற்றும் புதுச்சேரி மீனவர்களின் விசைப்படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, சபாநாயகர் செல்வம் தெரிவித்தார்.காரைக்காலுக்கு வந்த சபாநாயகர் செல்வம், வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின், அவர் கூறியதாவது:காரைக்காலில் உள்ள பழைய நீதிமன்றக் கட்டடத்தை சீரமைத்து, வட்டாட்சியர் அலுவலகம், பதிவுத்துறை அலுவலகம் உள்ளிட்ட ஒருங்கிணைந்த வருவாய்துறை அலுவலகம் அமைக்கப்படும். மத்திய அரசு திட்டத்தின் கீழ் வங்கிக் கடனுதவிகளை தாமதம் இல்லாமல் வழங்க வங்கியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்கள் அனைத்து தரப்பினரையும் சென்றடையும் வகையில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இலங்கையில் சுமூகமான சூழல் ஏற்பட்ட பின், இலங்கை அரசு பறிமுதல் செய்து வைத்துள்ள தமிழக, புதுச்சேரி மீனவர்களின் விசைப்படகுகளை மீட்க மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE