நேபாள நாட்டவர் தவறவிட்ட பணம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

Added : மே 14, 2022
Advertisement
புதுச்சேரி-நேபாள நாட்டை சேர்ந்தவர் போதையில் தவறவிட்ட ரூ.50 ஆயிரம் உள்ளிட்ட ஆவணங்களை மீட்டு ஒப்படைத்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.உருளையன்பேட்டை உதவி சப் இன்ஸ்பெக்டர் அருள்குமார் மற்றும் போலீசார், கடந்த 11ம் தேதி இரவு பஸ் நிலையத்தில் ரோந்து சென்றனர். அப்போது, ஒருவர் போதையில் மயங்கி கிடந்தார். அவரது அருகில் பை ஒன்று கிடந்தது. அதனை, போலீசார் கைப்பற்றி சோதனை

புதுச்சேரி-நேபாள நாட்டை சேர்ந்தவர் போதையில் தவறவிட்ட ரூ.50 ஆயிரம் உள்ளிட்ட ஆவணங்களை மீட்டு ஒப்படைத்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.உருளையன்பேட்டை உதவி சப் இன்ஸ்பெக்டர் அருள்குமார் மற்றும் போலீசார், கடந்த 11ம் தேதி இரவு பஸ் நிலையத்தில் ரோந்து சென்றனர். அப்போது, ஒருவர் போதையில் மயங்கி கிடந்தார். அவரது அருகில் பை ஒன்று கிடந்தது. அதனை, போலீசார் கைப்பற்றி சோதனை செய்ததில் ரூ.50 ஆயிரம் ரொக்கம், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மொபைல் போன், ஆதார் கார்டு, பாங்க் பாஸ் புத்தகம், ஏ.டி.எம். கார்டு இருந்தது. மயங்கி கிடந்தவர் நேபாள நாட்டை சேர்ந்த நுதானிசடா, 45; என்பதும், அவர் சென்னையில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வருவதும் தெரிய வந்தது. நுதானிசடா போதை மயக்கத்தில் இருந்ததால், சென்னையில் இருந்த அவரது மகன் ஜயகரன் சதா , உறவினர் பதரணி சதா ஆகியோரை போனில் தொடர்பு கொண்டு பேசிய போலீசார், அவர்களை புதுச்சேரிக்கு நேற்று வரவழைத்தனர். போதையில் இருந்த நுதனிசதாவையும், அவர் தவறி விட்ட ரொக்கம் உள்ளிட்ட ஆவணங்களையும், இன்ஸ்பெக்டர் பாபுஜி முன்னிலையில் உதவி சப் இன்ஸ்பெக்டர் அருள்குமார் ஒப்படைத்தார். பணம் உள்ளிட்ட ஆவணங்களை பாதுகாப்பாக மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த அருள்குமார் மற்றும் போலீசாரை, இன்ஸ்பெக்டர் பாபுஜி, நுதனிசதாவின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களும் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X