சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிப்பு: கடந்த ஆண்டைவிட 3.6 அடி உயர்வு

Updated : மே 14, 2022 | Added : மே 14, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பெரும்பாலான மண்டலங்களில், நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. இது, குடிநீர் வாரியம் மற்றும் நீர்வளத் துறை அதிகாரிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பருவ மழைக்கு முன், வடிகால்களை துார் வாரி, நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அவற்றை புனரமைப்பதால், வரும் நாட்களில் சென்னை மக்களின் தண்ணீர் தேவைக்கு தீர்வு காண

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பெரும்பாலான மண்டலங்களில், நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. இது, குடிநீர் வாரியம் மற்றும் நீர்வளத் துறை அதிகாரிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பருவ மழைக்கு முன், வடிகால்களை துார் வாரி, நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அவற்றை புனரமைப்பதால், வரும் நாட்களில் சென்னை மக்களின் தண்ணீர் தேவைக்கு தீர்வு காண முடியும் என, சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.latest tamil news
சென்னை மாநகராட்சியில், மொத்தம் 15 மண்டலங்களுக்கு உட்பட்ட 200 வார்டுகள் உள்ளன. சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கம், குடியிருப்பு மற்றும் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட காரணங்களால், இங்கு தண்ணீர் தேவையும் அதிகரித்துள்ளது. சென்னையை சுற்றி அமைந்துள்ள புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கங்களில் இருந்து, மாநகர் மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.

இது தவிர, கடலுார் மாவட்டம் வீராணத்திலிருந்தும் சென்னைக்கு நீர்வரத்து உள்ளது.அதே போல், ஆந்திர மாநில அரசுடன் செய்யப்பட்ட ஒப்பந்தப்படி, அங்குள்ள கண்டலேறு அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டு, தமிழகத்தின் திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆண்டுதோறும் பெய்யும் வடகிழக்கு பருவமழையால் கிடைக்கும் தண்ணீர், மேற்கண்ட நீர்த் தேக்கங்களில் சேகரமாகின்றன.

அதே போல், சென்னையில் உள்ள சிறிய குளங்கள், ஏரிகளிலும் மழைநீர் சேகரமாகி, அதன் வாயிலாக, சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் ஆதாரம் பாதுகாக்கப்படுகிறது. பருவ மழை பொய்க்கும் நிலையில், சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுவது வழக்கம். மக்கள் தொகை பெருக்கம், தொழில் நிறுவனங்கள் அதிகரிப்பு, கான்கிரீட் காடுகளாக முளைக்கும் கட்டடங்கள் என, நிலத்தடி நீர் ஆதாரம் குறைய பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனாலும், சென்னையில் முறையான மழை நீர் சேகரிப்பு வசதிகள் இல்லாததே, தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு காரணம் என, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.


latest tamil news
நீர்நிலைகள் மற்றும் நீர் வழித்தடங்களில் ஏகப்பட்ட ஆக்கிரமிப்புகள் முளைத்ததால், 2015ம் ஆண்டு பெய்த கனமழையின் போது, வெள்ளத்தில் மூழ்கி சென்னை தத்தளித்தது.இதையடுத்து, வெள்ள பாதிப்பை தடுக்கவும், மழை நீர் சீராக ஓடி, கடலில் கலக்கவும், மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

எனினும், 2018ம் ஆண்டு, சென்னையில் மீண்டும் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடியது. பல இடங்களில் பொதுமக்கள் தண்ணீர் குடங்களுடன் தெருக்களில் போராட்டம் நடத்தினர். பல ஆயிரம் ரூபாய் செலவழித்து, லாரிகளில் தண்ணீர் வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர். எனினும், அடுத்தடுத்த ஆண்டுகளில், பருவ மழை பொய்க்காததால், மக்கள் நிம்மதி அடைந்தனர்.

இந்நிலையில், சென்னையில் கடந்த ஆண்டு பருவ மழை நன்றாக பெய்ததால், நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பின.செம்பரம்பாக்கம் அணைக்கு தொடர் நீர் வரத்து இருந்ததால், அதிலிருந்து பல நாட்கள் தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால், கோடை துவங்கி பல நாட்கள் ஆகியும், சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்நிலைகளில் மொத்தம் ௮ டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது. அதே சமயம், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது தெரிய வந்துள்ளது.

தினமும் நிலத்தடி நீரை கணக்கிட, 200 வார்டிலும், நிலத்தடி நீர் அளவுமானிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதற்காக, மணல், களிமண் நிலத்தில் 100 அடியும், பாறையில் 60 அடியும் ஆழ்துளை கிணறுகள் தோண்டப்பட்டன. அந்த வகையில், நல்ல மழைப்பொழிவு, நீர்நிலைகள் புனரமைப்பு, மழை நீர் சேகரிப்பில் பொதுமக்கள் காட்டிய ஆர்வம் உள்ளிட்ட பல காரணங்களால், நிலத்தடி நீர்மட்டம் படிப்படியாக உயர துவங்கிஉள்ளது.

சென்னையில் உள்ள, 15 மண்டலங்களில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஏப்ரலில் நிலத்தடி நீர்மட்டம் சராசரியாக 1.11 மீட்டர் உயர்ந்துள்ளது. அதாவது, 3.6 அடி உயர்ந்துள்ளது. குறிப்பாக, திரு.வி.க., மண்டலத்தில், கடந்த ஆண்டு நிலப்பரப்பில் இருந்து, 13 மீட்டர் ஆழத்தில் இருந்த நிலத்தடி நீர், தற்போது, 6.8 மீட்டர் ஆழத்தில் உள்ளது. இந்த வகையில், அதிக நிலத்தடி நீர் கொண்ட மண்டலமாக திரு.வி.க., நகர் மண்டலம் உள்ளது. அதே போல், குறைந்த நிலத்தடி நீர் உடைய மண்டலமாக, திருவொற்றியூர் உள்ளது. கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு, 0.02 மீட்டர் நிலத்தடி நீர் குறைந்துள்ளது.

எனினும், சென்னை மாநகராட்சி முழுதும், சராசரி நிலத்தடி நீர் மட்டம் 3.6 அடி உயர்ந்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர். அதே சமயம், நீர்நிலை ஆக்கிரமிப்புகள் மீண்டும் அதிகரித்துள்ளது கவலை அளிப்பதாக, சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.மழைநீர் வடிகால்களை புனரமைத்து, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை முழுவதும் அகற்றி, அவற்றை முறையாக பராமரித்தால், வரும் காலங்களில் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருக்காது என, நீர்நிலை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-நமது நிருபர்-

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நல்லவன் - chennai,இந்தியா
14-மே-202207:48:38 IST Report Abuse
நல்லவன் உயர்ந்தது குடிநீரா - கடல் அல்லது கூவம் நீரா....
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
14-மே-202207:40:05 IST Report Abuse
duruvasar திராவிட மாடலின் ஒருவெற்றி படி கட்டு. இதுவே நீர் மட்டம் கீழ் இறங்கியிருந்தால் கட்டாயம் அது மோடியின் சதி திட்டமாகத்தான் இருந்திருக்கும்
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
14-மே-202206:49:12 IST Report Abuse
Kasimani Baskaran நேரடியாக திமுக லேபல் ஒட்டிவிடலாமே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X