10 ஆண்டில் சேர்க்கவேண்டியதை திமுக ஒரே ஆண்டில் சேர்த்துவிட்டது: சீமான் காட்டம்

Updated : மே 14, 2022 | Added : மே 14, 2022 | கருத்துகள் (23) | |
Advertisement
இளையான்குடி: பத்து ஆண்டுகளில் சேர்க்க வேண்டிய சொத்துக்களை, லஞ்சம், ஊழல் மூலம் தி.மு.க., ஒரே ஆண்டில் சேர்த்துவிட்டது,'' என இளையான்குடியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: இலங்கையில் ராஜபக்சே ஆட்சி மாறி ரணில் விக்ரமசிங்கே ஆட்சி வந்தாலும் அங்குள்ள பொருளாதார சிக்கல் தீராது. முதல்வர் ஸ்டாலின் ஈழத்தமிழர்களுக்காக என்ன
Seeman,சீமான்,நாம் தமிழர் கட்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

இளையான்குடி: பத்து ஆண்டுகளில் சேர்க்க வேண்டிய சொத்துக்களை, லஞ்சம், ஊழல் மூலம் தி.மு.க., ஒரே ஆண்டில் சேர்த்துவிட்டது,'' என இளையான்குடியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: இலங்கையில் ராஜபக்சே ஆட்சி மாறி ரணில் விக்ரமசிங்கே ஆட்சி வந்தாலும் அங்குள்ள பொருளாதார சிக்கல் தீராது. முதல்வர் ஸ்டாலின் ஈழத்தமிழர்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். ஆனால் அவர்கள் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கியூ பிராஞ்சையும், சிறப்பு முகாமையும் கலைக்க வேண்டும். இவை இரண்டையும் கலைக்காமல் ஈழத் தமிழர்களுக்கு என்ன நல்லது செய்ய முடியும்.


latest tamil news


பத்து ஆண்டுகளில் செய்ய முடியாத சாதனையை ஒரு ஆண்டில் செய்துள்ளோம் என தி.மு.க., கூறுகிறது. ஆம்... பத்து ஆண்டுகளில் ஊழல், லஞ்சமாக பெற்று சேர்க்க வேண்டியவற்றை ஒரே ஆண்டில் சேர்த்துவிட்டனர். இன்னும் 50 ஆண்டில் சேர்க்க வேண்டியதை அடுத்த நான்கே ஆண்டில் சேர்த்துவிடுவர்.இருமொழி கொள்கை என்பது ஏமாற்று வேலை. மும்மொழி கொள்கை என்பது மோசடி வேலை. பா.ஜ., அரசு தமிழகத்தில் சொத்துவரியை உயர்த்தியதை பேசுகிறது. தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைகளாக தெரிவிக்கின்றனர், என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
14-மே-202220:29:37 IST Report Abuse
bal நீங்களும்தானே தூபம் போடீர்கள்...நீங்கள் இவர்களின் பி டீம் தானே..
Rate this:
Cancel
K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா
14-மே-202219:37:58 IST Report Abuse
K. V. Ramani Rockfort பத்து ஆண்டுகளில் செய்ய முடியாத சாதனையை ஒரு ஆண்டில் செய்துள்ளோம் என்று சொல்லி மீதி நாட்களிலும் இப்படியேதான் செய்யும் இந்த அரசு. ஜெ என்றால் சட்டம் ஒழுங்கு, இலவச அரிசி, ஜெ இலவச மின்சாரம் அதுவும் தடையில்லமல், காவேரி நீர் உரிமை மீட்பு , முல்லை பெரியார் நீர் உரிமை, அட்மினிஸ்டரேஷன் அதிகாரிகள் பயப்பட்டனர், வியாபாரிகள் நிம்மதி, அதே போல் எம் ஜி ஆர் என்றால் சத்துணவு, கிருஷ்ணா நதி நீர், அதே போல் காமராஜர் என்றால் இலவச கல்வி, பள்ளி குழந்தைகளுக்கு இலவச சத்துணவு இப்படி மக்கள் கூறுவார்கள். ஆனால் காமராஜுக்கு பிறகு தி.மு.கட்சி திட்டங்கள் பேப்பரில் வரும், வாய் சவடால் வசனத்துடன், அப்படியே செய்தாலும் ஒரே சுருட்டல், விஞ்ஞான முறை ஊழல், மிரட்டல் தான் என்று மக்கள் சொல்ல்கிறார்கள்.
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
14-மே-202215:17:01 IST Report Abuse
Thiagarajan Kodandaraman முடி உள்ளவர் குடுமி வைத்துகிறார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X