வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ''கருணாநிதி பிறந்த மண்ணிலேயே, தி.மு.க., அரசுக்கு எவ்வளவு எதிர்ப்பு இருக்கிறது என்பதை காட்டிய ஒரு நிகழ்வு தான், திருவாரூரில் பா.ஜ., நடத்திய ஆர்ப்பாட்டம். மக்கள் எழுச்சியோடு திரண்டதால் இனி, இதே மாடலில் தான், பா.ஜ., தன் போராட்டங்களை முன்னெடுத்து செல்லும்,'' என்கிறார், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை.
அவர் அளித்த பேட்டி:
அரசுக்கு எதிராக...யார் யோசனையில் அப்படி செய்தனர் என்பது தேவையில்லை. ஆனால், அதை அங்கிருக்கும் மக்கள் ஏற்கவில்லை. இத்தனை ஆண்டு காலம், 'தெற்கு வீதி' என்ற பெயரில் இயங்கி வந்த வீதிக்கு, பகுத்தறிவு அரசியல் செய்தவரின் பெயர் சூட்டியதை, அங்கிருக்கும் மக்கள் ஏற்கவில்லை.
இதையடுத்தே, அங்கு போராட்டம் அறிவிக்கப்பட்டது. குறுகிய கால ஏற்பாடு தான் என்றாலும், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பாஸ்கர் மற்றும் அகோரம் ஆகிய இருவரும் மிகச் சிறப்பாக பணியாற்றி, எழுச்சியோடு மக்களை பங்கேற்க வைத்துள்ளனர்.இனி, தமிழகம் முழுதும் இந்த, 'திருவாரூர் மாடல்' போராட்டங்கள், அரசுக்கு எதிராக எழுச்சியோடு நடத்தப்படும்.
![]()
|
இத்தனை ஆண்டு காலமும், 'டெல்டா மாவட்டங்களில் எங்களை யாரும் அசைக்க முடியாது' என்று கூறி வந்த தி.மு.க.,வினர், பா.ஜ., போராட்டத்துக்கு வந்த மக்கள் எழுச்சியை கண்டு, மிரண்டு உள்ளனர்.உழைக்கும் தலைவர்கள்டெல்டா மாவட்டங்களில், தங்கள் ஆதிக்கத்தை மக்கள் விரும்பவில்லை என்பதை உணர்ந்து கலங்கி உள்ளனர். பா.ஜ.,வை தேடி மக்கள் ஆர்வத்தோடு வரத் துவங்கி விட்டனர் என்பது தான், இந்த போராட்டம் சொல்லும் விஷயம்.
பா.ஜ.,வின் கட்டமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற்று வருகிறது என்பதற்கு, இந்த போராட்ட வெற்றி எடுத்துக்காட்டு.சமீபத்தில் தான், பா.ஜ., நிர்வாக கட்டமைப்பில் மாற்றம் செய்யப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும், தலைவரை பார்த்து பார்த்து நியமித்திருக்கிறோம். பா.ஜ., சார்பில் ஒரு நிகழ்ச்சி என்றால், மற்ற பிரதான கட்சி நிர்வாகிகளை போல, எழுச்சியோடு மக்களை திரட்டி வர வைக்கும் வல்லமை கொண்டவர்களாக நியமித்திருக்கிறோம்.
ஒவ்வொருவரும் தங்கள் தகுதியை தலைமைக்கு நிரூபித்து வருகின்றனர். பா.ஜ., தேசிய தலைமை, மாநில தலைவர்களிடம் என்னவெல்லாம் எதிர்பார்க்கிறதோ, அதை மாநில தலைமை, மாவட்ட தலைவர்களிடம் எதிர்பார்க்கிறது.தகுதியோடு தான் இருக்கிறோம் என்பதை நிரூபிக்க, மாவட்ட தலைவர்கள் ஓடோடி உழைக்கின்றனர்.இலக்கை நோக்கிஇனி, உழைத்தால் மட்டுமே பா.ஜ.,வில் பொறுப்பில் இருக்க முடியும் என்பதை எல்லாரும் உணர்ந்துள்ளனர்.
சொல்லப் போனால் கட்சியில், அது எல்லாருக்குமான பொது விதியாகி விட்டது. அதனால், பா.ஜ., முழு வேகத்தில் இலக்கை நோக்கி பயணிக்கிறது.பா.ஜ., செல்லும் வேகத்தை முழுதுமாக விரும்பும் மக்கள், இன்றைக்கு லோக்சபா தேர்தல் வைத்தால் கூட, குறைந்தபட்சம், 10 தொகுதிகளில் கட்சியை வெற்றி பெற வைக்க தயாராக உள்ளனர்.
பா.ஜ., போராட்டத்துக்காக திருவாரூரில் திரண்ட மக்கள் வெள்ளத்தை பார்த்து, அங்கிருக்கும் தி.மு.க., கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் கட்சியினர் என ஆளும் கூட்டணியினர் கதிகலங்கி உள்ளனர். டெல்டா மாவட்டங்கள், பா.ஜ., வசமாகும் என்பது உறுதியாகி விட்டது.அதிர்ச்சிதிருவாரூரில் தியாகராஜர் தேர் ஓடும் தெற்கு வீதி, தெற்கு வீதியாகவே தொடர, பா.ஜ., தொடர்ந்து போராடும்.
நகரசபை தீர்மானத்தை வாபஸ் வாங்க வேண்டும். இனி, மக்கள் விரும்பாத விஷயங்களை, தி.மு.க., அரசு தொடர்ந்து செய்ய முடியாது.திருவாரூரில் பா.ஜ., போராட்டத்துக்கு மக்கள் பெரு வெள்ளமாக கூடுவர் என, ஆளும் கட்சியினர் எதிர்பார்க்கவில்லை. மக்கள் கூட்டத்தை பார்த்து, அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதனால், திருவாரூர் போராட்ட புகைப்படங்களை, சித்தரிக்கப்பட்ட படம் என, 'புருடா' விட்டு கொண்டிருக்கின்றனர். அவர்களின் நிலை, இப்படி ஆகி விட்டது! இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE