திருக்கோஷ்டியூர் விமானத்திற்கு தங்கத்தகடு: வேண்டுதலை நிறைவேற்றுகிறார் ஸ்டாலின் மனைவி

Added : மே 14, 2022 | கருத்துகள் (81) | |
Advertisement
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயில் அஷ்டாங்க விமானத்திற்கு தங்கத் தகடு வேயும் பணியை முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா இன்று துவக்கி வைக்கிறார்.இக்கோயில் அஷ்டாங்க விமானம் மிக பிரசித்தி பெற்றது. இந்த கோபுரத்தில் நின்றுதான் ராமானுஜர் மந்திர உபதேசத்தை பொதுவெளியில் வெளியிட்டார். இக்கோயிலில் அஷ்டாங்க விமானத்திற்கு தங்கத்தகடு வேய
Durga Stalin, Durga, Thirukoshtiyur Temple, Thirukoshtiyur

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயில் அஷ்டாங்க விமானத்திற்கு தங்கத் தகடு வேயும் பணியை முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா இன்று துவக்கி வைக்கிறார்.

இக்கோயில் அஷ்டாங்க விமானம் மிக பிரசித்தி பெற்றது. இந்த கோபுரத்தில் நின்றுதான் ராமானுஜர் மந்திர உபதேசத்தை பொதுவெளியில் வெளியிட்டார். இக்கோயிலில் அஷ்டாங்க விமானத்திற்கு தங்கத்தகடு வேய திட்டமிடப்பட்டது. மதுரை ஆண்டாள் பேரவையினர் 36 கிலோ தங்கம் வழங்க உள்ளனர்.


latest tamil newsமுதற்கட்டமாக 4 கிலோ வழங்கியுள்ளனர். கோயிலில் 20 கிலோ தங்கம் இருப்பில் உள்ளது. தங்கத்தகடு வேயும் பணியை துர்கா இன்று காலை துவக்கி வைக்கிறார். ஸ்டாலின் முதல்வராக இக்கோயிலில் துர்கா நேர்ந்து கொண்டதாகவும், அதை நிறைவேற்ற இன்று வருவதாகவும் கட்சியினர் கூறினர். மாலை சித்திரை தேரோட்டம் நடக்கிறது. சிவகங்கை தேவஸ்தான அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் தலைமையில் வரவேற்பு அளிக்க உள்ளனர்.

-நமது நிருபர்-

Advertisement
வாசகர் கருத்து (81)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-மே-202222:48:00 IST Report Abuse
raja rajathan ஒரு பக்கம் 200 கோவில்கள் இடித்து தள்ள வேண்டியது.மறுபக்கம் நாடகம் ஆட வேண்டியது.கழகத்தின் இரட்டை வேடம்.
Rate this:
Cancel
Sivaji - Singapore,சிங்கப்பூர்
14-மே-202222:17:31 IST Report Abuse
Sivaji வீட்டுக்காரர் செய்ற பாவத்துக்கு பரிகாரம் தேடுறேல்
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
14-மே-202221:53:50 IST Report Abuse
Matt P உங்க கிட்ட சாமி தங்க தகடு கேட்டாரா? ....குடியால் பெற்றோரை இழந்த நாலு பிள்ளைகளை தத்து எடுத்து வளருங்கள். புண்ணியமா இருக்கும். கணவரிடம் சொல்லி அதற்க்கு ஒரு வாரியம் அமைக்க சொல்லுங்கள். அந்த அளவுக்கு இன்றைக்கு குடியால் குடும்பங்கள் படும்பஆடு அதிகம். சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் கூட சுனாமியால் தவித்த நாலு பெண் பிள்ளைகளை கவனித்து திருமணம் செய்து வைத்திருக்கிறார். ..மக்கள் தொண்டே மகேசன் தொண்டு ..திமுக தலைவர் அண்ணாதுரை சொன்னது..........அம்பாள் எந்த காலத்திடஆ பேசினார். அறிவு கெட்டவன்ஏ. பக்தி பகல் வேஷம் போடுகிறது. கருணாநிதியின் வசநங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X