அஞ்சல் சேமிப்பு கருத்தரங்கு
மதுரை யாதவா கல்லுாரி வணிக மேலாண்மை துறை சார்பில் ஊமச்சிகுளம் அருகே ஆலாத்துாரில்அஞ்சலக சேமிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. அஞ்சலக துறை விற்பனை பிரதிநிதி ஜெய்கணேஷ் சிறுசேமிப்பு திட்டங்கள் குறித்து பேசினார். ஊராட்சி தலைவர் சரண்யா, கல்லுாரி முதல்வர் நாராயணன், சுயநிதிப் பிரிவு இயக்குனர் குணசேகரன், உதவி பேராசிரியர்கள் பிரபா, சந்திரலேகா பங்கேற்றனர்.
சாலை போக்குவரத்து விழிப்புணர்வு கருத்தரங்கு
மதுரை செந்தமிழ்க் கல்லுாரியில் நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் சாலை போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு தமிழ்ச் சங்க செயலாளர் மாரியப்பமுரளி தலைமையில் நடந்தது. முதல்வர் வேணுகா முன்னிலை வகித்தார்.நேரு வரவேற்றார். போலீஸ் துணை கமிஷனர் ஆறுமுகசாமி பேசினார். இன்ஸ்பெக்டர் கார்த்திக்,கவிஞர் தெய்வம் உள்ளிட்டோர் பேசினர். திட்ட அலுவலர் பூங்கோதை ஒருங்கிணைத்தார். பேராசிரியர் ஆறுமுகம் நன்றி கூறினார்
புரிந்துணர்வு ஒப்பந்தம்
மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி முதுகலை இயற்பியல் துறை, கோவை நியூ டெக்னாலஜி மொபைல், லேப்டாப் சர்வீஸ் மற்றும் ட்ரைனிங் இன்ஸ்டிடியூட் சார்பில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் பழுது நீக்கும் நேரடி பயிற்சி முகாம் நடந்தது. முதல்வர் மனோகரன் துவக்கி வைத்தார். துறைத்தலைவர் ராமசுவாமி அறிமுக உரையாற்றினார். பயிற்சியில் பங்கேற்ற 119 மாணவர்கள், 10 மாணவியருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிறைவு விழாவில் செயலாளர் விஜயராகவன் பேசினார். பின்பு மாணவர்களின் எதிர்கால வேலைவாய்ப்புக்கு துணைபுரியும் வகையில் பாடத்திட்டத்திற்கு ஏற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE