புதுடில்லி: 'பூஸ்டர் டோஸ்' இடைவெளி மூன்று மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
கொரோனா இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு, ஒன்பது மாதங்கள் ஆன பின், 'பூஸ்டர்' டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும், இது செலுத்தப்படுகிறது. பல நாடுகளில் பூஸ்டர் டோஸ் செலுத்திய பயணியர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். பூஸ்டர் டோஸ் செலுத்த ஒன்பது மாதங்கள் காத்திருக்க வேண்டி இருப்பதால், அவர்களால் உடனடியாக வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வெளிநாடுகளுக்கு செல்வோருக்காக, இரண்டாவது டோசுக்கும், பூஸ்டர் டோசுக்கும் இடையிலான ஒன்பது மாத கால இடைவெளி, மூன்று மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த சுற்றறிக்கையை, அனைத்து மாநில மற்றும் யூனிய பிரதேச அரசுகளுக்கும், மத்திய சுகாதாரத் துறையின் கூடுதல் செயலர் மனோஹர் அக்னானி நேற்று அனுப்பி வைத்தார்.மருத்துவ நிபுணர்களின் பரிந்துரைகளை ஏற்று, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE