வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு: ஊராட்சி செயலாளர் பணி நீக்கம்

Added : மே 14, 2022
Advertisement
செஞ்சி: செஞ்சி அருகே மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு செய்ததாக ஊராட்சி செயலாளரை பணி நீக்கம் செய்து கலெக்டர் மோகன் உத்தரவிட்டுள்ளார்.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த கெங்கவரம் ஊராட்சியில் பிரதம மந்திரி இலவச வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டும் பணி நடக்கிறது. இதில் முறைகேடு நடந்திருப்பதாக பொதுமக்களிடமிருந்து புகார் வந்தது.இதையடுத்து ஊரக

செஞ்சி: செஞ்சி அருகே மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு செய்ததாக ஊராட்சி செயலாளரை பணி நீக்கம் செய்து கலெக்டர் மோகன் உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த கெங்கவரம் ஊராட்சியில் பிரதம மந்திரி இலவச வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டும் பணி நடக்கிறது. இதில் முறைகேடு நடந்திருப்பதாக பொதுமக்களிடமிருந்து புகார் வந்தது.இதையடுத்து ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குனர் கெங்கவரம் ஊராட்சியில் ஆய்வு மேற்கொண்டார்.

அதில் முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டது. அதன் அடிப்படையில் ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.இதையடுத்து நேற்று, ஊராட்சி செயலாளர் மேனகாவை பணி நீக்கம் செய்தும், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் மருஅரசியை மரக்காணத்திற்கு பணியிட மாற்றம் செய்தும் கலெக்டர் மோகன் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X