வங்கியை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்| Dinamalar

வங்கியை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Added : மே 14, 2022 | |
பல்லடம்: கிசான் கடன் அட்டை வழங்க மறுத்ததாக கூறி, வங்கியை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருப்பூர் மாவட்டம், பூமலுார் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி, 57; விவசாயி. சாமளாபுரம் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் 'கிஷான்' திட்டத்தில், கடன் பெற விண்ணப்பித்தார். அதை நிராகரித்ததோடு, அசல் ஆவணங்களை திருப்பி வழங்க, வங்கி நிர்வாகம் மறுப்பதாக ராமசாமி குற்றம்சாட்டினார்.
 வங்கியை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பல்லடம்: கிசான் கடன் அட்டை வழங்க மறுத்ததாக கூறி, வங்கியை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம், பூமலுார் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி, 57; விவசாயி. சாமளாபுரம் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் 'கிஷான்' திட்டத்தில், கடன் பெற விண்ணப்பித்தார். அதை நிராகரித்ததோடு, அசல் ஆவணங்களை திருப்பி வழங்க, வங்கி நிர்வாகம் மறுப்பதாக ராமசாமி குற்றம்சாட்டினார். நேற்று, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், ராமசாமிக்கு ஆதரவாக வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். விவசாயிகளிடம் மனுவைப் பெற்றுக் கொண்ட வங்கி மேலாளர், கடன் அட்டை வழங்க ஆவன செய்யப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து, விவசாயிகள் கலைந்து சென்றனர். இந்த விவகாரம் குறித்து, வங்கி மேலாளர் விக்னேஷ்ராஜிடம் கேட்டதற்கு, ''விண்ணப்பிப்பவரின் பெயரில் அடங்கல் இருந்தால் மட்டுமே கடன் அட்டை வழங்க முடியும் என்பதால், ஆவணங்களை மாற்றி வருமாறு கூறினேன்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X