விருத்தாசலம்: விருத்தாசலம் புறவழிச்சாலையில் தனியார் பஸ் - டாரஸ் லாரி மோதிய விபத்தில் 20 பேர் காயமடைந்தனர்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று காலை 6:45 மணியளவில் 40 பயணிகளுடன் கணேஷ் என்ற தனியார் பஸ் சிதம்பரத்திற்கு புறப்பட்டது. பொன்னேரி புறவழிச்சாலையை பஸ் கடக்க முயன்றது. அப்போது நெய்வேலியில் இருந்து அரியலுாருக்கு சாம்பல் ஏற்றிச் சென்ற டாரஸ் லாரி மீது பஸ் மோதியது. இதில், பஸ்சில் பயணம் செய்த 20 பேர் காயமடைந்தனர்.
டாரஸ் லாரி டிரைவர், ஊத்தங்கால் கிராமத்தைச் சேர்ந்த வேல்ராஜ் என்பருக்கு, கால் விரல்கள் துண்டிக்கப்பட்டது. விருத்தாசலம் ஏ.எஸ்.பி., அங்கித் ஜெயின், இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.பின்னர், கிரேன் உதவியுடன் பஸ் மற்றும் டாரஸ் லாரியை அகற்றினர்.இதனால், விருத்தாசலம் - சிதம்பரம் சாலையில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதித்தது. விபத்து குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE