ஆகா..கல்பேலியா நடனம்| Dinamalar

ஆகா..கல்பேலியா நடனம்

Updated : மே 14, 2022 | Added : மே 14, 2022 | |
ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு பாராம்பரிய நடனங்களில் ‛கல்பேலியா' நடனமும் ஒன்று.இந்த நடனம் அங்குள்ள பூர்வீக குடிமக்களால் ஆடப்பட்டு வருகிறது.இந்த நடனத்தை சொல்லித்தர குருவோ,நடனப்பள்ளியோ கிடையாது தாய் தனது மகளுக்கு மகள் அவரது மகளுக்கு என்று முறையில்தான் இந்த நடனம் கற்பிக்கப்படுகிறது.பெண் பிறக்காத வீட்டில் ‛கல்பேலியா' நடனம் முற்றுப்பெறுகிறது.இதற்கானlatest tamil news


ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு பாராம்பரிய நடனங்களில் ‛கல்பேலியா' நடனமும் ஒன்று.இந்த நடனம் அங்குள்ள பூர்வீக குடிமக்களால் ஆடப்பட்டு வருகிறது.இந்த நடனத்தை சொல்லித்தர குருவோ,நடனப்பள்ளியோ கிடையாது தாய் தனது மகளுக்கு மகள் அவரது மகளுக்கு என்று முறையில்தான் இந்த நடனம் கற்பிக்கப்படுகிறது.பெண் பிறக்காத வீட்டில் ‛கல்பேலியா' நடனம் முற்றுப்பெறுகிறது.


latest tamil news


இதற்கான இசை மற்றும் பாட்டுடன் வேகவேகமான நடன அசைவுகள் கொண்ட கல்பேலியா நடனம் ஆடுவது என்பது அவ்வளவு எளிது அல்ல கண் சிமிட்டும் நேரத்தல் நம்மை சில அபார அசைவுகளுடன் கடந்து சென்றுவிடுகின்றனர்.


latest tamil news


இந்த நடனத்தை ஆடுவதை சிரமம் என்று உணர்ந்ததாலோ அல்லது வருமானம் தரக்கூடிய வேறு பல தொழில்கள் கைகூடி வந்ததன் காரணமாகவோ இப்போது இந்த நடனத்தை ஆடுபவர்கள் ராஜஸ்தான் முழுவதும் தேடினாலும் நுாறு பேர்தான் தேறுவார்கள்.
அழிந்துவரும் இந்த நடனக்கலையை காப்பாற்றும் விதத்திலும் நாடு முழுவதும் பிரபலப்படுத்தும் விதத்திலும் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ‛தட்சின்சித்ரா' கலைக்கூடத்தில் மூன்று நாள் இந்த குழுவினரின் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்,நாளை ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது நாளாகும்.
நடனம் மட்டுமின்றி ராஜஸ்தான் மாநில பராம்பரிய வாய்ப்பாட்டு மற்றும் பல்வேறு இசைக்கருவிகளை இசைக்கும் கலைஞர்கள் மற்றும் பொம்மலாட்ட கலைஞர்களும் வந்துள்ளனர் அவர்களது மாநில பொருட்களும் விற்பனைக்கு வைக்க்ப்பட்டுள்ளன.அனுமதி கட்டணம் உண்டு.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X