''மக்கள் பாதிக்காதபடி பஸ் கட்டணம் உயர்த்துவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்,'' என, அமைச்சர் நேரு கூறினார்.
சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அமைச்சர் நேரு நிருபர்களிடம் கூறியதாவது:
அ.தி.மு.க., ஆட்சியில் தான் கட்டுமானப்பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்தது. நிதி ஆதாரத்தை அதிகரிக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்கிறது.
சூழ்நிலைக்கேற்ப சிலவற்றின் கட்டணங்களை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. மக்கள் பாதிக்காதபடி போக்குவரத்து கட்டணம் உயர்த்துவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்.
ஏற்காட்டில் கோடை விழா
ஏற்காட்டில், மே, 26 முதல்
ஜூன், 1 வரை, கோடை விழா கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. அதில், சுற்றுலா பயணியரை கவர, ஏற்காட்டை மேம்படுத்தும்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அண்ணா பூங்காவில், 5 லட்சம் மலர்களால் கண்காட்சி, மாம்பழ கண்காட்சி அமைக்கப்பட உள்ளது.
கோடை விழாவுக்கு, சேலத்தில் இருந்து சிறப்பு பஸ்கள், சுற்றுலா பயணியருக்கு ஏற்காட்டின்
முக்கிய இடங்களை, ஒருநாள் முழுதும் சுற்றிக்காட்டும்படி பஸ்
வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெரிசலை தவிர்க்க, ஏற்காடு செல்லும்போது, சேலம் ஏற்காடு நெடுஞ்சாலை வழியாகவும், திரும்பி வரும்போது குப்பனுார் வழியாகவும் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அனைத்து அரசு துறை கண்காட்சி, கலைநிகழ்ச்சி, செல்லப்பிராணிகள் விளையாட்டு போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டு பரிசு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE