பி.எப்.ஐ., பிரிவினைவாத அமைப்பு: கேரள உயர் நீதிமன்றம் கருத்து

Updated : மே 14, 2022 | Added : மே 14, 2022 | கருத்துகள் (36) | |
Advertisement
கொச்சி: 'பி.எப்.ஐ.,எனப்படும் 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' மற்றும் 'சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி' ஆகிய பிரிவினைவாத அமைப்புகள் தீவிர வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. 'ஆனால், அவை தடை செய்யப்படவில்லை' என, கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்., எனப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் அமைப்பின் நிர்வாகி கொலை
SDPI, PFI,extremist outfits,banned,  Kerala High Court, Kerala HC

கொச்சி: 'பி.எப்.ஐ.,எனப்படும் 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' மற்றும் 'சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி' ஆகிய பிரிவினைவாத அமைப்புகள் தீவிர வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. 'ஆனால், அவை தடை செய்யப்படவில்லை' என, கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்., எனப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் அமைப்பின் நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.


latest tamil news
இந்த மனு நீதிபதி கே.ஹரிபால் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, ''பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாமற்றும் சோஷியல் டெமாக்ட்ரடிக் பார்ட்டி ஆகியவை பிரிவினைவாத அமைப்புகள் என்பதில் சந்தேகம்இல்லை. இந்த அமைப்புகள் தீவர வன்முறை செயல்களில் ஈடுபடுகின்றன. ''ஆனால் இதுபோன்ற இயக்கங்களை மத்திய அரசு இன்னும் தடை செய்யவில்லை,'' என்று கருத்து தெரிவித்தார்.

உயர் நீதிமன்ற நீதிபதியின் இந்தக் கருத்துக்கு, பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மற்றும் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Priyan Vadanad - Madurai,இந்தியா
15-மே-202201:09:01 IST Report Abuse
Priyan Vadanad கத்தி, குண்டு, துப்பாக்கி கலாச்சாரங்கள் கொண்ட எந்த கட்சியும் அமைப்பும் நாட்டு நலனுக்காக கண்டிப்பாக தடை செய்யப்பட வேண்டும். அதே நேரத்தில் ஆயுதங்கள் எதுவும் இல்லாமலே, தங்களுடைய சித்தாந்தங்களால் வெறுப்பு வளர்த்து மக்களை ஒருவருக்கொருவர் எதிரிகளாக்கி நாட்டை அழிக்கும் அமைப்புகளையும் தடை செய்ய வேண்டும்.
Rate this:
Cancel
Mohan - Salem,இந்தியா
14-மே-202219:39:17 IST Report Abuse
Mohan மத அடிப்படைவாதிகள் நீதி மன்றங்களை மதிக்காமல் அவற்றின் தீர்ப்புகளுக்கு கண்டனம் தெரிவிப்பது வாடிக்கை ஆகி விட்டது . இதில் ஒரு விஷயத்தை முக்கியமாக கவனிக்க வேண்டும். இந்த மத அடிப்படை வாதிகள் நாட்டின் எந்த சட்டத்தையுமே முழுவதுமாக ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் அவர்களது அடியாட்கள் கைது செய்யப்பட்டால் வழக்கறிஞருடன் உடனே ஆஜர் ஆகி விடுவார்கள்.அவர்களுக்கு ஜாமீன் வாங்க எல்லா வழிகளிலும் முயன்று முடிப்பார்கள். ஆனால் சட்டம் எல்லோருக்கும் சமம் என்றால் மட்டும் தங்களுக்கு தங்களது ஷரீஅத் சட்டம் தான் வேண்டும் என்பார்கள். முதலில் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் படி எல்லோரும் அதன் படி நடக்க வேண்டும் என்று கூறுங்கள் -அவ்வளவு தான் ,,,ஆர்பாட்டங்கள் தான் நடக்கும். முதலில் நீதி மன்றங்களை மதித்து நடக்க உத்தரவு போட வேண்டும்.
Rate this:
Cancel
... - ,
14-மே-202218:36:45 IST Report Abuse
... குண்டு வக்கிர த குல தொழி லா செய்றவங்க ளுக்கு ஆதரவு தர்றவங்கள என்ன செய்யலாம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X